tamilnadu

img

பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைப்பது மட்டும் பிரச்சனைக்கு தீர்வல்ல.... உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும் நிதி திட்டங்கள் வேண்டும்

புதுதில்லி:
இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் மூன்றுஉடனடி ஆபத்துக்கள் என்று ‘சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்’ ஆகியவற்றைமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடையாளப்படுத்தி இருந்தார்.

இவற்றை சரிசெய்ய வேண்டிய தேவையையும், என்ன செய்ய வேண்டும்என்றும் விரிவாக அவர் ‘தி இந்து’ கட்டுரையில் விளக்கியிருந்தார்.இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரும், தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து, எவ் வாறு வெளிவர வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

“முதலில் இந்த கொரோனா வைரஸைஎதிர்த்துப் போராட வேண்டும். கொரோனாவைரஸ் பிரச்சனைக்கு என்று தனியாகநிதி ஒதுக்கீடு (Stimulus Package) செய்யவேண்டும். இந்த வைரஸால் இந்தியாவில்இதுவரை யாரும் உயிரிழக்க வில்லை என்றாலும், சுமார் 130 கோடி பேர் வாழும் இந்தியா எந்த மோசமான சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.“இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில்கூட- நிதி சார்ந்த விஷயங்களில் மத்தியஅரசு பழமைவாதத்தோடுதான் இருக்கிறது. ஒருவேளை, இந்த கொரோனா வைரஸ், உலக பொருளாதாரத்தை, மந்தநிலையை நோக்கி நகர்த்தினால், அப்போதும் மத்திய அரசு, வெறுமனே தங்கள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேலையை மட்டும்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

இந்திய பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் விதத்தில், ஒரு நல்ல நிதித் திட்டத்தை தயார் செய்து வைக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தில் விதிக்கப்படும் வரிகள் மற்றும் மத்திய அரசு செய்ய இருக்கும் செலவீனங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் திட்டம் தான் நிதித் திட்டம் (Fiscal Policy) எனப்படுகிறது. வரியை கூடுதலாக வசூலிப்பதா வேண்டாமா..? வரியைக் குறைப்பது என்றால் எதில் குறைப்பது, யாருக்குகுறைப்பது, எங்கு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்பதையெல்லாம் உள்ளடக்கியது. இதில் கவனம் செலுத்தவேண்டும்” என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.“உலக பொருளாதாரத்தில், தேவை(டிமாண்ட்) குறைவாகவே இருக்கும் இந்தநேரத்தில், உள்நாட்டுத் தேவையை (டிமாண்டை) அதிகரிக்க, அரசு தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பொருளாதார வல்லுநர்ஜஹாங்கீர் ஆசிஸ் கூறியுள்ளார்.

“இந்தியாவின் ‘டாப் 10 கோடி’ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருட் களைத் தயாரிப்பதற்கு பதிலாக, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதத்தில், குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தால் வளர்ச்சி அதிகரிக்கும்”என்று இந்தியாவின் பிரபல பொருளாதாரவல்லுநர் ரதின் ராய் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி,சமீபத்தில் தனது வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்தது. பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக இதனைச் செய்ததாக கூறியது. இதேபோல்இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும்பொருளாதாரத்துறையின் பிரபலங்கள்ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

;