tamilnadu

img

மத்திய அரசின் நிதித் தொகுப்பு எங்களுக்கும் ஏமாற்றமே!

புதுதில்லி:
ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவிற்கான நிதித் தொகுப்பை அறிவித்திருக்கிறோம் என்று மத்திய அரசு கூறினாலும், எங்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது என்று விமானங்கள் மற்றும் ஹோட்டல்துறைகள் அறிவித்துள்ளன.

ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் கோடி நிதித் தொகுப்பில் எந்த அறிவிப்பும் இல்லை என்று இத்துறையினர் கூறியுள்ளனர்.விமானத்துறைக்கு இன்னும் குறிப்பிடத்தக்க தொகுப்பு இருக்கும் என்று நான் நம்பியிருந்தேன் “ஸ்பைஸ்ஜெட்” தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 24 ஆயிரம் கோடிமுதல் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்புடன் இந்த நிதியாண்டில் விமானத்தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்று ‘கிரிசில்’ அறிக்கைவெளியிட்டுள்ளதையும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.விருந்தோம்பல் மற்றும் சில்லரைத் துறைகளிலும் இதே நிலைதான். இங்கேயும் கிரிசிலின் மதிப்பீட்டின்படி, உணவகத் துறையின் ஒழுங்கமைக்கப் பட்ட உணவுப் பிரிவு அதன் வருவாய் நடப்பு நிதியாண்டில் 40 முதல் 50 சதவிகிதம் வரை குறையும்என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னரும் நுகர்வோர் உணவகங்களுக்கு திரும்பி வர வாய்ப்பில்லை என்கின்றனர்.தேசிய உணவக சங்கத்தின் (என்.ஆர்.ஏ.ஐ) தலைவர் அனுராக் கத்ரியார், இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், எங்களின் முதன்மைகோரிக்கைகள் பெரும்பாலும் பணப்புழக்கத்தை அதிகரிப்பது தொடர்பானது மட்டுமே என்று தெரிவித்துள்ளார். மற்றபடி அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிதி ஒதுக்கீடும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவில் 12 மில்லியன் மக்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தும் சில்லரை துறைக்கு பணப்புழக்கம் தான் மிகப்பெரியதேவை என்று இனோர்பிட் மாலின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ்அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (எஸ்.சி.ஏ.ஐ)இயக்குநருமான ரஜ்னீஷ் மகாஜனும் வலியுறுத்தியுள்ளார்.

;