சேலம், ஆக.12- குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுப்பாதையை மீட்டுத்தர வலி யுறுத்தி சேலம் மேற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி 3 ஆவது கோட்டம், ரெட்டியூர், பனங்காடு பகுதியில் சுமார் 30க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இதே பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தார் புறம்போக்கு நிலத்தில் கல் அரவை மில் நடத்தி வருகிறார்கள். இவர் களது மில்லிற்குத் தேவையான கற்களை அருகில் உள்ள காடு களில் வெடி வைத்து எடுத்து வரு வதால் அப்பகுதியில் அதிக சத்தம் ஏற்படுகிறது. இதேபோல் கல் அரவை மில்லிருந்து வெளி யேறும் புகையினால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இந்நிலையில், அம்மில்லின் உரிமையாளர், அப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மேற்கண்ட குடும்பங்கள் 50 ஆண்டு காலமாக பயன்படுத்த வந்த சாலையில் பெரிய பாறை கற்களைக் கொண்டும், இரும்பு கேட்டை அமைத்தும் யாரும் வந்து செல்ல முடியாத அளவிற்கு இரண்டு பக்கமும் பாதையை அடைத்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும், இறந்தவரின் உடலைக்கூட சுடு காட்டிற்கு எடுத்துச் செல்ல முடி யாதநிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக முதல்வர் முதல் அதிகாரிகள் வரை பல முறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. ஆகவே, 30 குடும்பங்களை சிறை வைத்து பொதுப் பாதை அடைத்து அரா ஜகம் செய்யும் மில் உரிமையா ளரை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமைப்பை விடுவிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்சி யின் மாநகர வடக்கு செயலாளர் என்.பிரவின்குமார் தலைமையில் வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சேது மாதவன், மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.முருகேசன் உள்ளிட்டு பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர். இப்போராட் டத்தைத் தொடர்ந்து மேற்கு வட் டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்ட அதி காரிகள் நடத்திய பேச்சுவார்த்தை யில் இடம் அளக்கப்பட்டு, வரும் 22ஆம் தேதிக்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.