tamilnadu

img

வாகனங்கள் காத்திருப்பு நேரம் பாஸ்ட்டேக்கால் குறையவில்லை... நாடாளுமன்றத்தில் நிதின் கட்காரி ஒப்புதல்

புதுதில்லி:
டோல்கேட்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில், மத்திய நரேந்திர மோடி அரசு‘பாஸ்ட்டேக்’ கட்டண முறையை கடந்த ஜனவரி 15 முதல் கட்டாயமாக்கியது.பாஸ்ட்டேக் என்பது (Radio-frequency Identification - RFID)ஸ்டிக்கர் என்பதாகும். மொபைல் போன்களில் பேசுவதற்கு முன் கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்வதற்கு போல,டோல் கட்டணங்களை முன்கூட் டியே செலுத்துவதுதான் ‘பாஸ்ட் டேக்’ முறையாகும். இதன்படி வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டப் படும் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை, டோல்கேட்டில் உள்ள ரீடர்கள், தானாகவே ஸ்கேன் செய்து, வாகனங்கள் டோலைக் கடப்பதற்கு வழிவிடும். இதனால், வாகனங்கள் டோல் கேட்டில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்பதுதான் மத்திய அரசின் கருத்தாகும்.

ஆனால், பாஸ்ட்டேக் கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், டோல்கேட் காத்திருப்பு நேரம் முன்பைவிட அதிகரித்து விட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் சிஸ்டத்திடம் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, வாகனங்கள் காத்திருக்கும் நேரம்உண்மையில் 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கேள்விகள் எழுப் பப்பட்ட நிலையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்காரியும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் குறிப்பிட்ட லேன்களில் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனினும், ரொக்கமாகவும் கட்டணம் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட் டுள்ள ஹைப்ரிட் லேன்களில் தான் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது; மற்றபடி பாஸ்ட்டேக்உடன் கூடிய கார்களின் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது என்று சமாளித்துள்ளார்.இந்தியா முழுவதும் ஒவ் வொரு நாளும் ஏறக்குறைய 60 லட்சம் வாகனங்கள் டோல்கேட் களை கடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

;