tamilnadu

img

2 ஆண்டாக ஊதிய நிறுத்தம்.. குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ்

புதுதில்லி:
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ரோஷினா நசீர் மீது ஏவியுள்ள தாக்குதலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாதர் சங்கங்களும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக மரியம் தாவ்லே (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), அனி ராஜா (இந்திய தேசியமகளிர் சம்மேளனம்), கவிதா கிருஷ்ணன் (அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம்), ஜியோத்ஸ்னா சட்டர்ஜி (கூட்டுப் பெண்கள் திட்டம்), சயிதா ஹமீது (முஸ்லீம் பெண்கள் ஃபோரம்) ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மூன்று ஆண்டு காலமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகதுணை வேந்தராலும் நிர்வாகத்தின ராலும் அங்கு ‘சிஎஸ்எஸ்இஐபி’ மையம் எனப்படும்  சமூக விலக்கல்மற்றும் உள்ளார்ந்த கொள்கை மையத்தில் ( Centre for Study of Social Exclusion and Inclusive 
Policy (CSSEIP) )-இல்  பணியாற்றிவரும் உதவிப் பேராசிரியர் டாக்டர்ரோஷினா நசீர் மீது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் பாகுபாடு காட்டுவதும், தொல்லை கொடுத்து அலைக்கழிப்பதும் தொடர்கதையாக இருந்து வருவதற்கு எங்கள்ஆழ்ந்த  கவலையையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஒரு பெண் என்பதாலும் மற்றும் அவர் ஒரு முஸ்லிம் என்பதாலும் இவ்வாறுகுறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. டாக்டர் நசீர் ஜேஎன்யு-வின் அனைத்து நடவடிக்கைகளி லிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய ஜேஎன்யு குடியிருப்பைக் காலி செய்திட வேண்டும் என்றும்அவருக்கு அறிவிப்பு (நோட்டீஸ்)அனுப்பப்பட்டிருக்கிறது. அவரிடம் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவர்களைதங்களுடைய மேற்பார்வையாளரை மாற்றிக்கொள்ளு மாறும்ஜேஎன்யு ‘சிஎஸ்எஸ்இஐபி’ மையம்  கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் மேற்படி மையத்தின்தலைவர் மீது தன்னைப் பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக டாக்டர் நசீர் புகார் அளித்திருந்தார். இவருடைய புகார் மீது மிகவும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட விசாரணை கூட அவர் கூறியது உண்மை யல்ல என்று முற்றிலுமாக மெய்ப்பிக்க முடியவில்லை.
மேலும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பல்கலைக் கழக மானியக்குழு மேற்படி ‘சிஎஸ்எஸ்இஐபி’ மையத்திற்கு 2020 வரையிலும் நிதி ஒதுக்கீட்டை அளித்துள்ள போதிலும் இவருக்கு மட்டும் இவ்வாறு ஊதியம் வழங்கப்படவில்லை. இவர் பெண் என்பதாலும், இவர் முஸ்லிம் என்பதாலும் இவரை பணியில் தொடர்வதற்கு சிரமங்களை  ஜேஎன்யு நிர்வாகம் தொடர்ந்து அளித்து வருகிறது.டாக்டர் நசீர், இது தொடர்பாகதில்லி சிறுபான்மை ஆணையத்திற்கு புகார் அளித்திட நிர்ப்பந்திக்கப்பட்டார். சிறுபான்மை ஆணையம்தன் இடைக்காலத் தீர்ப்பில் துணை வேந்தரும், ‘சிஎஸ்எஸ்இஐபி’ மையத்தின் தலைவரும் 2019ஆகஸ்ட் 1 அன்று டாக்டர் நசீர்அளித்திட்ட மனுவிற்குப் பதிலளித்திட வேண்டும் என்றும், அவரு
டைய ஊதியத்தை உடனடியாக அளித்திட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது. மேலும், அவரை எக்காரணம் கொண்டும் குடியிருப்பிலிருந்து காலி செய்திடக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறது. நிர்வாகம், அவருடைய ஊதியத்தைகடந்த சில தினங்களில் அளித்திட ஆணை பிறப்பித்திருக்கிற போதிலும் அவருடைய குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பைத் திரும்பப் பெற்றிடவில்லை.

டாக்டர் நசீர் நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் அவர்மீது காட்டிவரும் பாகுபாட்டையும், துன்புறுத்தல்களையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அவர் குடியிருப்பைக் காலி செய்யவேண்டும் என்கிற அறிவிப்பையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர் தன் கல்விப்பணியைத் தொடர அனுமதித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இவ்வாறு அவர்மீது மிக மோசமான முறையில் நடவடிக்கைகள் எடுத்துள்ள நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.டாக்டர் நசீரின் போராட்டத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மாதர் அமைப்புகளும் ஒருமைப்பாடு தெரி
வித்து ஆதரவளித்திட வேண்டும்என்றும் அனைத்து அமைப்புகளையும்  அறைகூவி அழைக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தங்கள்கூட்டு அறிக்கையில் கூறியுள்ளார்கள். (ந.நி.)

;