tamilnadu

img

புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது.ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சீராகாத நிலையில் பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லூரிகளுக்கான தேர்வை அவசரகதியில் நடத்தும் முடிவினை ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் பயிலும் காரைக் கால், மாகே, யானம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே தேர்வுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வு கட்டணம் மற்றும் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.அரசு உத்தரவுகளை மீறி அடாவடி தனமாக பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் விண்ணரசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.நிர்வாகிகள் கவியரசன், வினோத் உள்ளிட்ட திரளான மாணவர்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். மதகடிபட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் வந்தனா, செந்தமிழ்,  வசந்த், பிரவீன் ஆகியோர் தனிமனித இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

;