தஞ்சாவூர்:
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தமைக்காக, சிறையில் அடைக்கப் பட்டு, இருதய நோயால் உயிருக்கு போராடும் கவிஞர் வரவர ராவ் மற்றும்21 மாதங்களுக்கும் மேலாக சிறையில்வாடும் அறிவுஜீவிகள் ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லேகா, சுதா பரத்வாஜ், அறிஞர் சோமாசன் ஆகியோரைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை ரயிலடியில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள்சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித் தார். தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் நிறைவுரை ஆற்றினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் சி.முருகேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமாநகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்தசாமி, மாநகரக் குழு உறுப்பினர் அப்துல் நசீர், மக்கள்அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், சிபிஎம்.எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் கலை இலக்கியக் கழகம் நகர செயலாளர் இராவணன், இந்திய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்டச் செயலாளர் எம். சேகர், தமிழ்தேச மக்கள் முன்னணி ஆலம்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.