tamilnadu

img

இன்று மத்திய அமைச்சரவைக்கூட்டம்

புதுதில்லி, அக்.8 - தில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதனன்று மத்திய அமைச்ச ரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி யின் அதிகாரப்பூர்வ இல்லம் தில்லி 7  லோக் கல்யாண் மார்க்கில்  நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தவிர மற்ற கேபினட் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்கள் நெருக்கடியில் உள்ள நிலையில், பொதுத்துறைகள் தனியாருக்கு  தாரைவார்க்கப்பட்டுவரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் பயனுள்ள வகையில் முடிவுகள் எடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.