tamilnadu

img

ஒரே நாளில் மிக அதிகமாக 38, 902 பேருக்கு கொரோனா!

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஜூலை 16ஆம் தேதி இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு. இந்நிலையில் அடுத்த மூன்றுதினங்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்குப்பாதிப்பு ஏற்பட்டு, 11 லட்சத்தை நெருங்கியிருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஞாயிறன்று (ஜூலை 19) புதிய உச்சமாக 38,902பேருக்கு நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 10,77,618 ஆக அதிகரித்துள் ளது. இதில் இதுவரை 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 543 பேர் உட்பட மொத்தம் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர். 3,73,379பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜூலை 18 வரை 1,37,91,869 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இதில் 3,58,127 மாதிரிகள் சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள் ளது.

பிரதமர்-முதல்வர் ஆலோசனை
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றாலும், கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் நரேந்திர மோடிஞாயிறன்று (ஜூலை 19) தொலைபேசி யில் தொடர்புகொண்டு பேசினார். கொரோனா நிலவரங்கள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசினர்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஞாயிறு காலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக முதல்வர், பிரதமரிடம் தெரிவித் தார் என்றும் அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;