‘ஒரு நபர் ஆட்சிக்கு தலையாட்ட முடியாது..’
மாநில அரசு என்பத ற்கான தேவை எதிர் காலத்தில் இருக்குமா? இந்த நாட்டை ஒரு மனி தர் (மோடி) மட்டுமே ஆட்சிசெய்து, நாமெல்லாம் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டிருக்கப் போகிறோமா? என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு நடப்ப தற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘இந்தியாவில் இருப்பது கோட்-பூட் அரசு!’
பெருவணிகர் களுக்கு ரூ. 1லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு வரிச்சலுகை அளிக்கப் படுகிறது. ஆனால், நடுத்தர வகுப்பினர் பெற்ற வங்கிக் கடனுக் கான வட்டிகூட தள்ளுபடி செய்யப்படுவ தில்லை. இதுதான் மத்தியிலுள்ள ‘கோட்-பூட் சர்க்கார்’ என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
‘அமைதிப் போராட்டம் தேசத் துரோகமா?’
காஷ்மீரில், நிறு வனமய மாக்கப்பட்ட அடக்குமுறையின் (போலீஸ், ராணுவம்) மூலம் ‘வலுக்கட்டாய இயல்பு நிலை’யை சாதி க்கின்றனர் என்று காஷ்மீர் முன்னாள் முத ல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி மத்திய அரசை சாடி யுள்ளார். ‘அமைதிவழிப் போராட்டமும் தேசத் துரோகமா?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘நானும் ஒரு இடதுசாரி சிந்தனையாளன்தான்..’
கவிஞராக அறியப் படுபவரும், பாஜகவில் எம்.பி.யாக இருப்ப வருமான வருண் காந்தி, தன்னை ஒரு ‘இடதுசாரி சிந்தனையாளன்’ என்று கூறிக் கொண்டுள்ளார். “இயல்பாகவே நான் வலதுசாரி கொள்கையில் ஈடுபாடு கொண்டவன் அல்ல; என் எழுத்துக்களே அதற்கு சாட்சி” என்றும் வருண் தெரி வித்துள்ளார்.