tamilnadu

img

டாஸ்மாக்கில் ஆயிரக்கணக்கில் திரண்ட ‘குடிமகன்கள்’

இந்தியாவில் மே 17- ஆம் தேதி வரை 3-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சில நிபந்த னைகளுடன் மதுபானக் கடைகளை திறக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த ஊரடங்கு தளர்த்தல்களை அமல்படுத்த தில்லி அரசு ஞாயிற்றுக் கிழமை அறிவிப்புகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தில்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள சுமார் 150 மது பானக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திங்கள்கிழமை காலை தில்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெளியே ஆயிரக்கணக் கான ‘குடியர்கள்’ திரண்டனர். தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஒரு மதுபான கடைக்கு வெளியே, கூட்டம் கூடியதால் கடை உரிமையாளர் காவல்துறையை பாதுகாப்புக்கு அழைத்தார். இதே போல மற்ற மதுபானக் கடைகளுக்கு வெளியேயும் கூட்டம் காணப்பட்டது. அங்கு மதுபான பிரியர்கள் சமூக இடை வெளியை மீறினர்.

தில்லி சந்திரா நகரில் உள்ள மது பானக் கடை முன்பு திரண்ட கூட்டம் ஒரு வர் மீது ஒருவர் விழுந்து மதுபாட்டில் களை வாங்கப் போராடினர். சமூக வில கல் காற்றில் பறக்கவிடப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வட் டங்கள் போட்டும், காவல்துறை பாது காப்பு இருந்தும் மதுபான பிரியர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. தில்லி புராரி பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு வெளியே வாக னங்களுடன் ஒரு பெரும் கூட்டம் மது வாங்கக் காத்திருந்தது. அவர்கள் தங்க ளுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வில்லை யென்றாலும் சமூக இடைவெளி யைக் கடைப்பிடிக்கவில்லை.

கர்நாடகம்

கர்நாடகாவின் மாண்டியாவில், மதுபானக் கடைகளுக்கு வெளியே கூடி யிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டியிருந்தது. பல இடங்களில், அதி காலை மூன்று மணி முதலே மதுபானக் கடைகளுக்கு வெளியே காத்திருக்க குடைகள், மழைபெய்தால் தங்களை தற்காத்துக்கொள்ள ரெயின் கோட்டு களை எடுத்துச் சென்றனர்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் திங்கள் கிழமை முதல் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்திருந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கே சென்று மதுபானம் வழங்குவதை அறிமுகப்படுத்தவும், ‘சமூக இடைவெளியை’ பராமரிப்ப தற்கும், மதுபான விற்பனை நிலையங்க ளில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஐந்து லிட்டர் வரை மதுபானங்கள் வழங்கப்பட்டன. ராஜ்நந்தகோன் என்ற இடத்தில், மதுக் கடையைத் திறந்தவுடன் ஏராளமா னோர் முண்டியடித்துச் சென்றதால், விதி முறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. தில்லி, கர்நாடகம், சத்தீஸ்கர் சொல் லும் பாடத்தை தமிழகத்தில் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மற்ற மாநிலங்களைப் போலத்தான் இங்கும் நிகழும். தமிழகத்தில் கொரோனா பரவ லுக்கு “டாஸ்மாக் கடைகள்” இடமளித்து விடக்கூடாது.