tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

சாமர்த்தியம் காட்டும் ராம்தேவ்
புதுதில்லி:

“அயோத்தி விவகாரம் விரைவில் முடி வுக்கு வரவிருக்கிறது. அயோத்தியில் ராமர்  கோவில் கட்டப்படுவது உறுதி” என்று‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும், சாமியாருமான ராம்தேவ் கூறியுள்ளார். “ராமர்தான் அயோத்தியில் பிறந்தார்; மாறாக கடவுளின் கடைசிதூதர் என்று அழைக்கப் படும் முகம்மது நபிகள் அல்ல என்பது முஸ்லிம் சகோதரர்களுக்கும், இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். எனவே அயோத்தி யில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்” என்றும் ராம் தேவ் சாமர்த்தியம் காட்டியுள்ளார்.

அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் மிரட்டல்
லக்னோ:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும்என்று மாநில பொதுப் பணித்துறைக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். எந்த வேலையும் நடக்காத பட்சத்தில் மாவட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். தேவைப்பட்டால் அதிகாரிகளுக்கு எதிராகஎப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும் என்றுஆதித்யநாத் மிரட்டியுள் ளார்.

காங்கிரசே  நாடக கம்பெனி வெல்ல காரணம்
நல்கொண்டா:

காங்கிரஸ் கட்சி காரணமாகவே, நாடகநிறுவனம் (பாஜக.) நாட்டில் வெற்றி பெற்றுள் ளது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைசி கூறியுள்ளார். போரிடும் உணர்வு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. முடிவடைந்த நிலையில் அந்த கட்சி உள்ளது. இவ்வாறு காங்கிரஸ் பலவீனம் அடைந்ததனால்தான் நாடக நிறுவனம் (பா.ஜ.க.) வெற்றி பெற்றுள்ளது என்று ஓவைசி பேசியுள்ளார்.

இந்துமகா சபா தலைவர் சுட்டுக் கொலை
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இந்துமகா சபை தலைவர் கம்லேஷ் திவாரி என்பவர், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குர்ஷிதாபாத்தில் உள்ள கம்லேஷின் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமையன்று மதியம் திடீரென நுழைந்தமர்ம நபர்கள் சிலர்,திவாரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டு, இப்படு கொலையை நடத்தி யுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பைசாபாத் தொகுதியில் கம்லேஷ் சுயேச்சையாக போட்டியிட்டவர் ஆவார்.