tamilnadu

img

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சாதனையாம் பெருமைப்பட்டுக் கொள்கிறார் பிரதமர்

புதுதில்லி, மே 31- கொரேனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டு வருவற்கு முன்பே, புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கொரோ னாவால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம், பரவலின் வேகத்தையும் குறைந் திருக்கலாம் என்று பிரதமர் மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு அறிக்கை அனுப்பியுள்ளனர் இந்த அறிக்கையை எய்ம்ஸ், ஜேஎன்யு, ஜேஎன்யு, பிஹெச்யு, இந்திய பொதுசுகாதார அமைப்பு(ஐபிஹெச்ஏ), இந்திய சமூக நோய்தடுப்பு அமைப்பு (ஐஏபிஎஸ்எம்), இந்திய தொற்றுநோய் தடுப்புஅமைப்பு(ஐஏஇ) அமைப்புகள் இணைந்து அறிக்கையொன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் போது 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கின் நான்காவது கட்டம் முடியும் போது, மே 24-ஆம் தேதி ஒரு  லட்சத்து 38 ஆயிரத்து445 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில், சாலையில், சைக்கிளில் செல்லும் போது, அவர்கள் கொரோ னா தொற்றுக்குள்ளாகி நாட்டின் மூலை முடுக்கிற்கெல்லாம் தொற்றை கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்கள், புறநகர் பகுதிகளில் குறைவான பாதிப்பு இருக்கும், மருத்துவ வசதி குறைவாக இருக்கும் மாவட்டங்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நோய்தொற்றைக் கொண்டு செல்கிறார்கள். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டு வருவற்கு முன்பே, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படுவதை தவிர்த்திருக்க லாம், பரவலின் வேகத்தையும் குறைத்திருக்கலாம். நோய் பரவுதல், நோயைக் கட்டுப் படுத்தும் சிறப்பான ஊரடங்கு குறித்து (மாடல்கள்) பற்றி  தொற்றுநோயியல் நிபுணர்களை இந்திய அரசு கலந்தா லோசித்திருந்தால் இன்னும் ஊரடங்கை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். நிர்வாகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையே பெரிதும் ஆட்சி யாளர்கள் நம்பியிருந்தனர்.

தொற்று நோய், பொது சுகாதாரம், தடுப்பு மருத்து வம், சமூக விஞ்ஞானம் போன்ற துறை களில் நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுடனான அரசின் ஈடுபாடு குறைவாக இருந்தது. இதன்காரணமாகவே மனிதாபி மான நெருக்கடி, நோய் பரவலில் மிகப் பெரிய விலையை இந்தியா கொடுத்து வருகிறது. தேசிய அளவில் பொருத்த மற்ற முறையில் அடிக்கடி மாறும் நிலை பாடுகள், கொள்கைகள் போன்றவை தொற்றுநோய்தடுப்பு வல்லுநர்கள் மனநிலையில் சிந்திப்பதாக இல்லா மல் ஆட்சியாளர்களின் ஒரு பகுதி மன நிலையிலேயே இருக்கிறது. கொரோனா பாதிப்பைக் களைய மாநிலம் அளவில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு சுகாதார நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் குழுவை அமைக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவு கள் அனைத்தும் வெளிப்படையாக இருத்தால்தான் ஆய்வு செய்பவர் களால் எளிதாக அணுகமுடியும்.

அதை தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, நோயின் தீவிரம், அதைக் கட்டுப் படுத்தும் மாற்று வழிகளை கண்டறிய முடியும்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும், மக்களுக்கு விழிப்புணர்வும் தேவை. இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், நுரை யீரல் தொடர்பான நோய்கள் இருப்ப வர்களைக் கண்டறிந்து தொடர்ந்து சிகிச்சையளித்தல், கண்காணித்தல், கண்டுபிடித்து தனிமைப்படுத்துதலை தொடர்ந்து செய்ய வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மோடியின் ஒப்புதல் வாக்குமூலம்
இந்த நிலையில் ஞாயிறன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்து வதில் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமைப்பட்டுக் கொண்டார். “போக்குவரத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நான் உரையாற்றிய போது பொதுப் போக்குவரத்து, விமானங்கள், ரயில்கள் ஓடவில்லை, ஆனால் இப்போது அதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும்.  தொற்றுநோயால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்தித்த பிரச்சனை ஒரு  சிறந்த படிப்பினையை எதிர்காலத் திற்கு வழங்கியுள்ளது’’ என்று அவர் கூறினார்.

;