tamilnadu

img

அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்தது மோடி அரசு

புதுதில்லி:
ஈரான் நாட்டிடமிருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, இந்தியா முழுமையாக நிறுத்தி விட்டது.

இதுதொடர்பாக, இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, ‘முறைப்படி’ அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஈரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை முறித்துக்கொண்ட அமெரிக்கா, மேலும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. உலக நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், மீறி வாங்கினால், அந்த நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. 

எனினும், ஈரானிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் வழங்கியது. அதற்குள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் கூறியது.அமெரிக்கா கூறிய 6 மாதகால அவகாசம் மே 2-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்த போது, இந்தியாவில் தேர்தல் நடந்ததால், எண்ணெய் இறக்குமதி குறித்து முடிவு செய்ய, மோடி அரசு கூடுதல் அவகாசம் கோரியது.

அதன்படி தற்போது தேர்தல் முடிவடைந்து, மீண்டும் மோடியே பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, இந்தியா அடியோடு நிறுத்திக் கொண்டுள்ளது.அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா இத்தகவலை, அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளார். அதாவது ‘உங்களின் உத்தரவுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து விட்டோம்’ என்று ‘நன்னடத்தைச் சான்றிதழ்’ பெற முயன்றுள்ளார்.ஈரானிடமிருந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வெனிசூலா நாட்டிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டோம் என்று ஷிரிங்லா குறிப்பிட்டுள்ளார்.

;