tamilnadu

img

54 ஆண்டு வரலாற்றை மாற்றியது எல்டிஎப்

பாலா தொகுதியில் யுடிஎப் கோட்டை தகர்ந்தது

பாலா, செப்.27- கடந்த மூன்று முறை கைவிட்டபோதிலும் இம்முறை கேரளத்தின் பாலா தொகுதி வாக்காளர்கள் மாணி சி. காப்பனை கைவிடவில்லை. கே.எம்.மாணி 54 ஆண்டு களாக வெற்றி பெற்ற பாலா சட்டமன்ற தொகுதியில் இப்போது மற்றொரு மாணி வெற்றி பெற்றுள்ளார்.     அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர். வெள்ளியன்று (செப்.27) காலை 8 மணிக்கு பாலா சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு  எண்ணிக்கை பாலா கார்மல் பொதுப்பள்ளி யில் தொடங்கியது. தபால் வாக்குகளில் முன்னிலை பெற்ற மாணி சி. காப்பன் முதல் சுற்றில் எண்ணப்பட்ட ராமபுரம் பஞ்சாயத்தி லும் அடுத்தடுத்த சுற்றுகளிலும் முன்னிலை பெற்றார்.

இறுதியாக யுடிஎப் வேட்பாளர் ஜோஸ் டோமைவிட 2943 வாக்குகள் அதிகம்  பெற்று எல்டிஎப் வேட்பாளர் மாணி சி காப்பான் வெற்றி பெற்றார். எல்டிஎப்புக்கு 54137  வாக்கு கள் (42.31 சதவிகிதம்), யுடிஎப்புக்கு 51194 வாக்குகள் (40.01 சதவிகிதம்), என்டிஏ வின் பாஜக வேட்பாளர் என்.ஹரிக்கு 18044 வாக்குகள் (14.01 சதவிகிதம்) கிடைத்துள் ளன. நோட்டாவுக்கு வெறும் 742 வாக்கு கள் பதிவாகியிருந்தன. யுடிஎப்பின் வலுவான கோட்டைகளாக விளங்கிய ராமபுரம், கட நாடு, மேலுகாவு, முந்நிலவு, தலநாடு, தலப்ப லம், பரணங்ஙானம், கரூர், எலிக்குளம் ஆகிய பஞ்சாயத்துகளிலும் பாலா நகரசபையிலும் மாணி சி காப்பன் முன்னிலை பெற்றார்.

மூத்தோளி, மீனச்சல், கொழுவனால் ஆகிய பஞ்சாயத்துகளில் மட்டுமே ஜோஸ் டோம் முன்னிலை பெற முடிந்தது.  மக்களவை தேர்தலில் பெற்றதைவிட 20,638 வாக்குகளை கூடுதலாக இடது ஜனநா யக முன்னணி பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதி யை ஆளும்கட்சி கைப்பற்றியுள்ளது குறிப் பிடத்தக்கது. எல்டிஎப் அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த மூன்று இடைத்தேர்தல்களில் இரண்டை எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே, செங்ஙன்னூரில் மூன்றில் இரண்டு  பங்கு வாக்குகளை கூடுதலாக எல்டிஎப் பெற்றது. இப்போது யுடிஎப்பின் கோட்டையை தகர்த்து எல்டிஎப்  வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வேங்கரா தொகுதியின் எம்எல்ஏ குஞ்ஞாலிக்குட்டி, எம்.பி ஆனதால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் மட்டுமே யுடிஎப் வெற்றிபெற முடிந்தது.  ஒருபோதும் எல்டிஎப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருத்தப்பட்ட மக்கள் பகுதியினர் கூட பாலா தொகுதியில் எல்டி எப்புக்கு ஆதரவாக அணிதிரண்டனர். இது அடுத்து நடை பெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் யுடிஎப்புக்கு 33,472 வாக்கு களை கூடுதலாக வழங்கிய பாலா வாக்காளர்கள் இம்முறை சுமார் 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக அளித்து எல்டிஎப் வேட்பா ளர் மாணி சி காப்பனை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

ஊக்கமளிக்கும் தீர்ப்பு

பாலா தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாள ரின் மகத்தான வெற்றியை பாராட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: இடது ஜனநாயக முன்னணி அரசின் நிலையான நீடித்த வளர்ச்சி மற்றும் மக்கள் நல செயல்பாடுகளை மேலும் அதிக ஆற்றலுடன் முன்னெடுக்க மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு ஊக்கமளிப்ப தாகும். தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்து வம் அளித்து அவை நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.