வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வேங்கரா தொகுதியின் எம்எல்ஏ குஞ்ஞாலிக்குட்டி, எம்.பி ஆனதால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் மட்டுமே யுடிஎப் வெற்றிபெற முடிந்தது. ஒருபோதும் எல்டிஎப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருத்தப்பட்ட மக்கள் பகுதியினர் கூட பாலா தொகுதியில் எல்டிஎப்புக்கு ஆதரவாக அணிதிரண்டனர். இது அடுத்து நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பிரதிபலிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்புநடந்த மக்களவைத் தேர்தலில் யுடிஎப்புக்கு 33,472 வாக்குகளை கூடுதலாக வழங்கிய பாலா வாக்காளர்கள் இம்முறைசுமார் 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக அளித்து எல்டிஎப் வேட்பாளர் மாணி சி காப்பனை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
ஊக்கமளிக்கும் தீர்ப்பு
பாலா தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரின் மகத்தான வெற்றியை பாராட்டி கேரள முதல்வர் பினராயிவிஜயன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: இடதுஜனநாயக முன்னணி அரசின் நிலையான நீடித்த வளர்ச்சிமற்றும் மக்கள் நல செயல்பாடுகளை மேலும் அதிக ஆற்றலுடன்முன்னெடுக்க மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு ஊக்கமளிப்பதாகும். தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவை நிறைவேற்றப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.