tamilnadu

img

வீடும், நிலமும் சொந்தமாக்கி தந்தது இஎம்எஸ் அரசு

விவசாய தொழிலாளர் மாநாட்டில் பினராயி விஜயன் பேச்சு

கண்ணூர், ஜன.4- குடி வெளியேற்றம் தடுத்தும், நில உரிமை சட்டமியற்றியும் விவசாயி கள், விவசாய தொழிலாளர்களை பாதுகாத்தது இஎம்எஸ் தலைமை யிலான கேரள அரசு என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கண்ணூரில் ஜன.1 முதல் 3 வரை வரை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அகில இந்திய மாநாடு நடந்தது. வெள்ளியன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியின் நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசியதாவது: 

நிலத்தில் உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்கள் விடுத லைக்காக தேசிய இயக்கம் நடத்திய போராட்டத்தின் பகுதியாக இருந்தது. விவசாயிகள் நடத்திய போராட்டங் களை விடுதலைக்கான போராட்டத்தி லிருந்து விலக்கி வைத்து பார்க்க முடியாது. விவசாயிகளுடன் விவ சாய தொழிலாளர்களும் இப்போராட் டங்களில் அணிவகுத்தனர். நிலத்தில் உழைப்பவர்களுக்கு சொந்தமானது நிலம் என்கிற முழக்கம் அப்போது உயர்ந்துவந்தது. நாங்கள் பயிரிட்டு அறுவடை செய்யும் நிலம் எங்க ளுக்கு சொந்தமானது என்கிற முழக் கத்தை கிண்டல் செய்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பின்னர் அடக்குமுறையை ஏவினர். அவர் களுக்கு துணையாக காவல்துறை யும் அணிவகுத்தது. அப்படித்தான் நாம் இன்று போற்றும் ரத்த சாட்சி களாக பலர் மாறினர்.

கையூர், கரிவள்ளுர், முனியன் குந்நு என்று பல பகுதிகளிலும் விவ சாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடியபோது காவல்துறையின் தாக்குதல்களை எதிர்கொண்டு உயிரி ழக்க நேர்ந்துள்ளது. அதன் மூலம் கேரளத்தின் விவசாயிகள் இயக்கம் தளர்ந்து விடவில்லை. இந்த போராட் டங்களுக்கு அமைப்புரீதியாக வழி காட்டி தலைமை தங்க கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலை ஏகா திபத்தியமும் (ஆங்கிலேயர்) பின்னர் அதிகாரத்துக்கு வந்த அரசும் கட்ட விழ்த்துவிட்டன. ஆனால், அனைத்து அதிகார வர்க்க நடவடிக்கைகளை யும் எதிர்கொண்டு புத்துயிர் பெற்று கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக வளர்ந்தது. நாம் விடுதலை பெறும் போது மிகப் பெருமளவுக்கு மக்கள் பங்கேற்பை சாத்தியப்படுத்தி தலைமை வகித்த தோழர் ஏகேஜி சிறையில் இருந்தார். விடுதலையின் விடியலை சிறையிலிருந்துதான் அவரால் காணமுடிந்தது.

விடுதலைக்கு பிறகு மிகக் கடு மையான கம்யூனிஸ்ட் வேட்டை நடந்தது. இதோடு கம்யூனிஸ்ட் இயக் கம் ஒழிந்தது என எதிரிகள் கொண்டா டினர். ஆனால் அந்த இயக்கம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததை அவர் கள் கண்டனர். அந்த அரசு நிலத்தில் உழைக்கும் விவசாயிகளும், விவசா யத் தொழிலாளர்களும் எழுப்பிய முழக்கங்களுக்கு தீர்வு காண முயன்றது. அன்று விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை ‘குடியிறக் கம்’ என்கிற வீடுகளை விட்டு வெளி யேற்றம் செய்யப்படுவதாகும். எந்த நிமிடமும் அவர்கள் குடிசையிலி ருந்து வெளியேற்றம் செய்யப்பட லாம் என்கிற நிலை அப்போது இருந்தது.  உடமையாளர் சொன்னால் அந்த நிமிடம் அங்கிருந்து வெளியேறு வதை தவிர வேறு வழியில்லை. பயிர் விளைந்து நிற்கும் நிலம் உனக்கு சொந்தமில்லை என்று நில உடமை யாளர் கூறினால் உடனே நிலத்தை விட்டு வெளியேற வேண்டும். இதற்கு எதிராக விவசாய போராட்டங்கள் எழுந்தன. அந்த போராட்டங்கள் வீண் போகவில்லை. 1957இல் அதிகா ரத்துக்கு வந்த இஎம்எஸ் தலைமை யிலான அரசு முதலில் கொண்டு வந்த சட்டம் குடியிறக்கத்தை தடை செய்த தாகும். இதை அன்றைய காலகட்டத் தில் நமது விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இது குறித்த வானொலி செய்தியை கேட்ட உடன் தாமாகவே தெருக்களில் இறங்கி பேரணிகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து நில உரிமை குறித்தான மசோதா கொண்டு வரப்பட்டது. நில விநியோகத்துக் கான முதல்படி அது. இஎம்எஸ் கொண்டு வந்ததைத்தொடர்ந்து அந்த அரசு கலைக்கப்பட்டது. அதன்பிறகு வந்த அரசுகள் அந்த சட்டத்தில் விவசாயி களுக்கு சாதகமான பிரிவுகளை நில உடமையாளர்களுக்கு சாதகமாக்க மாற்றினார்கள். பின்னர் 1967இல் அமைந்த இடதுசாரிகள் அரசு நில உரிமை சட்டத்தில் செய்யப்பட்டி ருந்த திருத்தங்களை ரத்து செய்தது. 1970இல் இந்த சட்டம் முழுமையாக அமலானது. இந்த நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் எந்தவித பங்க ளிப்பும் செய்யாத அமைப்பு ஆர்.எஸ்எஸ். அதனால் தான் அவர்கள் விடுதலையின் அருமை தெரியாமல் இந்த நாட்டின் அரசமைப்பு சாச னத்தை சீர்குலைத்து வருகிறார்கள் என்றார்.

புதிய நிர்வாகிகள்

அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளராக பி.வெங்கட் தேர்வு செய்யப்பட்டனர். கண்ணூரில் நடந்த சங்கத்தின் 3 நாள் தேசிய மாநாடு வெள்ளியன்று (ஜன.3) அகில இந்திய நிர்வாகிகளை தேர்வு செய்தது. தலைவராக ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளராக பி.வெங்கட், துணை தலைவர்களாக எம்.வி.கோவிந்தன், அமிய பத்ரா, பானுலால் சஹா, ஏ.லாசர், பூப் சந்த் சாந்த்னோ, கே கோமளகுமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இணை செயலாளர்களாக விக்ரம் சிங், துஷார் கோஸ், வி.வெங்கடேஸ்வரலு, பிரிஜ்லால் பாரதி, பி.ராகவலு, நித்தியானந்த சுவாமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தமிழக தலைவர்கள்

அகில இந்திய துணைத் தலைவர்: ஏ.லாசர்

மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: எஸ்.திருநாவுக்கரசு, வீ.அமிர்தலிங்கம், எஸ்.சங்கர், மத்திய கவுன்சில் உறுப்பினர்கள்: ஜி.மணி, பி.வசந்தாமணி, மலை விளைபாசி, ஏ.பழநிசாமி, கே.பக்கிரிசாமி, ஜி.கணபதி, எம்.சின்னத்துரை, ஏ.வி.அண்ணாமலை, எஸ்.பூங்கோதை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

;