tamilnadu

img

பாஜக செய்யும் அனைத்திலும் அகங்காரமே வெளிப்படுகிறது... ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விளாசல்

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, நாட்டின் புகழ்பெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய் வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராமும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்துள்ளார். டுவிட்டரில், ‘#Citizenship¡Bill’ என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, பி.சி.ஸ்ரீராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலிலும் அவர்களின் அகங்காரம் வெளிப் படுகிறது; அவர்கள் நம்மை (இந்து- முஸ்லிம்களை) பிரிக்கப் பார்க்கிறார்கள்” என்று மிகக் கடுமையாக அவர் சாடியுள்ளார்.மேலும், “சிஸ்டத்தின் (ஆட்சி அமைப்புக்கள்) மீதானநம்பிக்கை குறைந்து வருகிறது; அவர்களின் அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது” என்று கூறியுள்ள பி.சி. ஸ்ரீராம், “ஆனால்நமது மதச்சார்பற்ற மனப் பான்மை உறுதியானது; அதுஎன்றும் உறுதியாகச் செயல்படும்” என சிறுபான்மையினருக்கு தனது ஒருமைப்பாட் டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

;