tamilnadu

img

வெண்டிலேட்டருக்கு இல்லாத பணம் எல்இடி டிவி-க்கு இருக்கிறதா?

புதுதில்லி:
நாடு கொரோனா தொற்றால் சூளப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரட்டிப்பு வேகத்தில் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பலி எண் ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மற்றொரு புறத்தில் தொழில் முடக்கத்தால்நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தற்போதைய நிலை தொடரும் பட்சத்தில் இந்தியா வரலாறு காணாத பட்டினிச் சாவுகளை சந்திக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

ஆனால், நாட்டை ஆளும் பாஜக-வும்,அதன் தலைவர்களும் கொரோனா தடுப்புப்பணிகள் எதிலும் அக்கறை காட்டுவதாக இல்லை. மாறாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார்தேர்தலுக்கான பிரச்சாரத்தையும், 2021 மே மாதம் நடைபெறவுள்ள மேற்குவங்க தேர்தலுக்கான பிரச்சாரத்தையும், இப் போதே பாஜகவினர் துவங்கி விட்டனர்.பீகாரில் 72 ஆயிரம் எல்.இ.டி. திரைகள் வழியாக, கடந்த ஜூன் 7 அன்று மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆன்லைன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அதைத்தொடர்ந்து, மே 9 அன்றும் மேற்குவங்க மக்கள் மத்தியில் அமித்ஷா தேர்தல்பிரச்சாரம் செய்தார். மேற்குவங்கத்தில் தனியாக 70 ஆயிரம் பிளாட் டி.வி.க்கள் நிறுவப்பட்டன. 15 ஆயிரம் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டன. 

ஒட்டுமொத்தமாக, இரண்டு மாநிலதேர்தல் பிரச்சாரத்திற்கும் பல நூறுகோடிரூபாய்களை பாஜக-வினர் அள்ளிக் கொட்டினர்.ஆம்பன் புயலால் நிலைகுலைந்து போன மேற்கு வங்கத்தில் மூங்கில் மரத்தில்எல்.இ.டி. டி.வி. கட்டப்பட்டிருப்பது மற்றும்கிராம மக்கள் அதனைச் சுற்றி அமர்ந்து அமித்ஷா உரையைக் கேட்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டு, தேர்தல் வெற்றியை நெருங்கி விட்டதாக பெருமை பீற்றியிருந்தனர்.இது எதிர்க்கட்சிகளை மிகுந்த கோபத்தில் தள்ளியிருக்கிறது.கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் வாங்குவதற்கு அரசிடம் பணமிருக்காது; ஆம்பன் புயலுக்கு நிவாரணம் வழங்க பணமிருக்காது; ஆனால், அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, ஒன்றரை லட்சம் எல்.இ.டி. திரைகள் மற்றும் ஸ்மார்ட் டி.வி.க்களை அமைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது? என்றுஎதிர்க்கட்சிகள் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளன.இதுதொடர்பாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராகேஷ் சச்சன் வெளியிட்டுள்ள கருத்துப் பதிவில், “கொரோனாவைரஸ் ஊரடங்கால் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாஜக-வால் தலா 7ஆயிரத்து 500 ரூபாய் வழங்க முடியாது; அவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடுசெய்ய முடியாது; ஆனால், தேர்தல் பிரச்சாரம் மட்டும் செய்ய முடிகிறதா?” என்று கேட்டுள்ளார்.“வெண்டிலேட்டர்களுக்குப் பதிலாகஎல்.இ.டி டிவிக்கள்... உண்மையிலேயேநாடு மாறிக்கொண்டிருக்கிறது...” என்றுஆம் ஆத்மி கட்சியும் விமர்சனம் வைத் துள்ளது.