tamilnadu

img

சுஷ்மா சுவராஜ் காலமானார் தலைவர்கள் அஞ்சலி

புதுதில்லி:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரு மான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் செவ்வா
யன்று (ஆகஸ்டு 6) இரவு காலமானார். அவரது மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சுஷ்மா சுவராஜ் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு தலைசிறந்த தலைவரை நாடு இழந்துள்ளது. நாட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவரை நாம் என்றும் நினைவில் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டு அழுதார். அவர், “ஏழைகளின் வறுமையைப் போக்கவும், பொது சேவைக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்து வாடுகிறது. கோடிக் கணக்கான மக்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “சுஷ்மா சுவராஜின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைசிறந்த தலைவரான இவர், சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கட்சிபேதமின்றி அனைத்து தலைவர் களோடு நல்லிணக்கத்தோடு பழகிய பண்பாளர். பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டிற்கே பேரிழப்பா கும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின், “முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக் கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பலஉயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா. அவர் திடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக்குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் விடுத்துள்ள செய்தியில், “சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் திறமையான அரசியல்வாதி. அவருடன் இலங்கைப் பயணம் சென்றபோது, அவர்தமிழ் ஈழம் மற்றும் இதர தேசிய உலகப்பிரச்சனைகளைக் கையாண்ட விதம் பசுமை யாக நினைவில் உள்ளது. என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;