tamilnadu

img

3 மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடி கடன் வாங்கிய மாநிலங்கள்...

புதுதில்லி:
பொதுமுடக்க காலத்தில் மட்டும்,இந்திய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம்கோடி கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக ‘இக்ரா’ நிறுவனஆய்வறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது.அதில், “ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்திய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மொத்தம் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம்  கோடி கடன் வாங்கியுள்ளன; இது 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல்- ஜூன் காலாண்டோடு ஒப்பிடுகையில், இரண்டு மடங்கு அதிகம்” என்றுகூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் - ஜூன் காலாண்டில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மொத்தம் ரூ. 80 ஆயிரம்கோடி அளவிற்கே கடன் வாங்கி இருந்தன என்றும் ‘இக்ரா’ தெரிவித்துள் ளது.அத்துடன், அதிகம் கடன் வாங்கியமாநிலங்கள் குறித்த ‘இக்ரா’வின் பட்டியலில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அதிகபட்சமாக தமிழ்நாடு ரூ. 28 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. மகாராஷ்டிரா ரூ. 25 ஆயிரத்து 500 கோடி,
ராஜஸ்தான் ரூ. 16 ஆயிரம் கோடி,ஆந்திரப் பிரதேசம் ரூ. 15 ஆயிரம் கோடி, தெலுங்கானா ரூ. 12 ஆயிரத்து 500 கோடி, கேரளா ரூ. 12 ஆயிரத்து 400 கோடி, மேற்குவங்கம் ரூ. 10 ஆயிரம் கோடி, ஹரியானா ரூ. 9 ஆயிரம் கோடி, குஜராத் ரூ. 8 ஆயிரத்து600 கோடி, கர்நாடகா ரூ. 7 ஆயிரம்கோடி என கடன்கள் வாங்கியுள்ளன.

நாட்டில், 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த கடன்தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடியில், 10 மாநிலங்கள் மட்டும் 86.1 சதவிகித (சுமார் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி) கடனைப் பெற்றுள்ளன.

;