tamilnadu

img

தாயை தெருவில் தவிக்கவிட்ட மகன்கள்

கரீம்நகர், மே30- தெலுங்கானா மாநிலத்தில் தனது 80 வயது நிரம்பிய தாய்க்கு கொரோனா தொற்றிருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது மகன்கள் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் கிஷான் நகரைச் சேர்ந்தவர் கட்டா சியாமளா (80) ஊரடங்கு அறிவிக்கப்படு வதற்கு முன்பு ஷோலாப்பூரில் நடை பெற்ற உறவினர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றி ருந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த கட்டா சியா மளா வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்துள் ளார். இதற்கிடையில் தனது தாய் வந்து விட்டார் என்பதையறிந்த மகன் நரசிம்மாச் சாரி தாயை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வீட்டை பூட்டிவிட்டார். இதனால்  காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி அவர் தெருவிலேயே அமர்ந்துள்ளார். 

இதுகுறித்து நரசிம்மாச்சாரி கூறுகை யில், “தனது மகள் கர்ப்பிணியாக இருப்ப தால் தாயை அனுமதிக்க முடியாது” எனக் கூறிவிட்டார். சியாமளாவின் இளைய மகன் ஈஸ்வராச்சாரியும் தாம் வாடகை வீட்டில் குடி யிருப்பதாகவும் வீடு மிகவும் சிறியது எனவும் கூறி மறுத்துவிட்டார். ஒரு வழியாய் நரசிம்மாச்சாரியின் வீட் டிற்கு அருகில் வசிப்பவர்கள் அவரை சமா தானம் செய்தனர். இதையடுத்து அவர் தனது தாயை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

;