சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
புதுதில்லி, ஏப்.26- மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, ‘பாசிடிவ்’ நிலை அதிகமாக இருப்பதற்கும், அந்த மாநிலத்தை ஒரு சுகாதார நெருக் கடிக்குத் தள்ளியிருப்பதற்கும், பாஜக பதில் சொல்லியாக வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறி யுள்ளார்.
“மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சுகாதார நெருக் கடி ஏற்பட்டுக்கொண்டிருப்பது குறித்து கிஞ்சிற்றும் கவ லைப்படாமல், எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதி லேயே கவனம் செலுத்திய பாஜகவின் உயர்மட்டத் தலைமை தான், மத்தியப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மாநி லத்திலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்குப் பொறுப்பாகும்,” என்று சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியிருக்கி றார். மேலும், “அதிகாரத்தின் மீதான அவர்களின் இச்சை, மாநிலத்தில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற் கான முயற்சிகளை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறது,” என்றும் அவர் சாடியுள்ளார்.