தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதனன்று அவரது முகாம் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.