‘டிஜிட்டல்’, ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா பொருந்தாது
சசிதரூர் பேச்சு
புதுதில்லி, பிப்.5- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டிற் கான பட்ஜெட் மீதான விவா தம், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கி ரஸ் எம்.பி. சசிதரூர் இந்த விவாதத்தில் பங்கேற்று, மோடி அரசின் திட்டங்கள் பெயரளவில்- காகிதத்தில் மட்டுமே இனிப்பதாக கிண்ட லாக கூறி விமர்சித்துள்ளார். “ டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்று வெறும் உதட்டளவில் இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால், ‘ஸ்டேண்ட் அப் இந்தியா’ என்ற வார்த்தையை இவர் கள் சொல்வதில் எந்த அர்த்த மும் இல்லை. வெளியே ‘ஸ்டேண்ட் அப் இந்தியா’ என்று சொல்லிக் கொண்டு ‘ஸ்டேண்ட் அப் காமெடியன்’களைக் கூட (நடிகர் குணால் கம்ரா) விடா மல் தடை செய்வதில் தீவிரமாக இருக்கிறீர்கள். இனிமேல் உங்கள் அரசுத் திட்டங்க ளுக்கு ‘சிட்-டவுன் இந்தியா, ஷட்-அப் இந்தியா, ஷட்- டவுன் இந்தியா’ என்று பெயர் வைத்துக் கொள்ளுங் கள்” என்று சசிதரூர் கூறி யுள்ளார்.