புதுதில்லி,டிச.20- தில்லி உட்பட பல்வேறு வட மாநிலங்களில் வெள்ளி யன்று திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவு கோலில் .3 ஆக பதிவானது. தில்லி, என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை ஆடின. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.