tamilnadu

img

வியாபாரிகளிடம் வெங்காயம் கையிருப்பு பாதியாக குறைப்பு

புதுதில்லி,டிச.4- வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகை யில் வியாபாரிகளிடம் வெங்காய கையிருப்பு அளவை பாதியாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள் ளது.மத்திய நுகர்வோர் விவகாரத்துறை  அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சில்லரை வியாபாரி கள் கையில் வைத்திருப்பதற்கான வெங்காய இருப்பு அளவு 10 டன்னில் இருந்து 5 டன்களாகவும், மொத்த விலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவு 50 டன்களில் இருந்து 25 டன்களாகவும் குறைக்கப் பட்டுள்ளது. இந்த கையிருப்பு அளவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.