tamilnadu

img

பெருமுதலாளிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை... அம்பானி, அதானி, டாட்டா, பாரதி மிட்டல்

புதுதில்லி:
2020-21 நிதியாண்டிற்கான பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தொழிற்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடமும் பிரதமர் மோடி ஆலோசனை மேற் கொண்டு வருகிறார். அந்த வகையில், நாட்டின் பெருமுதலாளிகளை வரவழைத்து, அவர்களிடம் பிரதமர்மோடியே நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜிடிபி)கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், முந்தைய 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 4.5 சதவிகிதமாக குறைந்தது. அப்போது, முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம்என்று கூறி, பெருமுதலாளிகளுக் கான கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகமோடி அரசு குறைத்தது. அதாவது, சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயைஅநாமத்தாக அள்ளிக் கொடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, 2020-21 பட்ஜெட்டில், “பெருமுதலாளிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?” என்பது குறித்து, பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான கவுதம் அதானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, மகேந்திரா டெக் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல்,டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், டி.வி.எஸ். குழும தலைவர்வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

;