tamilnadu

img

பட்னாவிஸ் ஓட்டம்

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பை சந்திக்க பாஜக அச்சம்

புதுதில்லி,நவ.26-  குதிரை பேரத்தை தடுக்க மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பை புதனன்றே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவசர அவசரமாக முதல்வராக பதவி யேற்ற பாஜக பட்னாவிஸ் நான்கே நாளுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. ஆட்சியமைப்பதில் பெரும் ‘கிங்’குகளாக சித்தரிக்கப்பட்டு வந்த மோடி-அமித்ஷாவின் ‘வியூகம்’ பலத்த அடி வாங்கி தோல்வியடைந்துள் ளது. சர்வாதிகார பாஜகவின் அஸ்தமனம் அவர்கள்  வலுவாகவுள்ள மகாராஷ்டிராவிலிருந்து துவங்கி யுள்ளது என்று அரசியல் கட்சியினர் தெரிவித்துள் ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவு களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. இதில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைப் பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கின. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலும் ஆட்சி யமைக்க முடியாத ஆத்திரத்திலும் மத்திய பாஜக அரசு மகாராஷ்டிராவில் குடியரசுத் தலை வர் ஆட்சியை திணித்தது.  இந்நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து  ஆட்சியமைப்பதற்காக ஆளுநரை சந்திக்க விருந்த நிலையில், இரவோடு இரவாக  குடியரத்  தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு, அதி காலையில் பாஜகவின் பட்னாவிசை ஆட்சி யமைக்க அழைத்தார் மாநில ஆளுநர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலை வர் அஜித் பவாரை ‘அழைத்து’ வந்து  ஆட்சி யமைக்க உரிமை கோரியது பாஜக.  பட்னாவிஸ்  முதல்வராகவும் அஜித்  பவார் துணை முதல்வ ராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.  ஆளுநரின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்த பதவியேற்புக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சி களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஞாயி றன்று தொடங்கியது.  அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா அமர்வு செவ்வாயன்று தீர்ப்பளித்தது.  தீர்ப்பில், நீதித்துறை மற்றும் சட்டமன்றங் களின் தனித்தனி அதிகார வரம்புகள் மதிக்கப் பட வேண்டும். கடைசி வாய்ப்பாகவே நீதிமன்றங் கள் இத்தகைய பிரச்சனைகளில் தலையிடு கின்றன.  மகாராஷ்டிரம் அதற்கு ஒரு உதாரணம்.மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நாளையே (புதன்) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை (புதன்) அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இந்த நடைமுறைகளை நாளை (புதன்) மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக் கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படக் கூடாது. அதை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்.  இன்று (செவ்வாயன்று) மாலை 5 மணிக்குள்  இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் புதனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு தேவையான அனைத்தையும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உறுதிப்படுத்துமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ராஜினாமா

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அடுத்த சில மணி நேரங்களிலேயே துணை முதலமைச்சர் பதவியிலிருந்து அஜித் பவார் விலகினார். பின்னர்  மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த  தேவேந்திர பட்னாவிஸ், முதலமைச்சர் பதவியி லிருந்து விலகுவதாக அறிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவர் அஜித் பவார், ஆதரவுக் கடி தத்துடன் தங்களை அணுகியதால் ஆட்சி அமைத்த தாகவும், ஆனால் அவர் திடீரென்று ஆதரவை தொடர முடியாது என்று கூறிவிட்டதாலும், தங் களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதாலும், ராஜினாமா செய்ய உள்ளதாக பட்னாவிஸ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்று பட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். 

முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாயன்று இரவு ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 3 கட்சிகளின் கூட்டணிக்கு மகாராஷ்டிரா  வளர்ச்சி முன்னணி என்று பெயரிடப் பட்டது. முதல்வர் பதவிக்கான வேட்பாளராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு  செய்யப்பட்டார். கூட்டணியை வழிநடத்து வதற்கான ஒருங்கிணைப்புக்குழுவும் இக்கூட்டத் தில் அமைக்கப்பட்டது.  

இன்று  ஆளுநருடன் சந்திப்பு

புதன்கிழமையன்று இரவு 9 மணியளவில் உத்தவ் தாக்கரே, ஆளுநரை சந்தித்து ஆட்சி யமைக்க உரிமை கோருகிறார். டிசம்பர் 1 அன்று மும்பை சிவாஜி பூங்காவில்  பதவியேற்பு  விழா நடைபெறும் என்றும்  துணை முதலமைச்சர் களாக காங்கிரஸின் பாலசாஹேப், தேசியவாத காங்கிரஸின் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர்   பதவி யேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.  சிவசேனா கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர்  பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுக்க  வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்வி ராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார்.  மகா ராஷ்டிர  மக்களிடம் பட்னாவிஸ், அஜித் பவார்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள் ளார்.

இடைக்கால சபாநாயகர் தேர்வு

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கரை இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்து மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்புக் கூட்டம் புதன்கிழமையன்று காலை 8 மணிக்கு கூடுகிறது.  எம்.எல்.ஏக்களுக்கு காளி தாஸ் கொலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப் பார். எம்எல்ஏக்கள் பதவியேற்புக்காக மட்டுமே இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டம்  நடைபெறுகிறது.