tamilnadu

img

வாகன முதலுதவிப் பெட்டிகளில் ஆணுறை இல்லாவிட்டாலும் அபராதம்!

புதுதில்லி:
மோடி அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம்வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் அபராத மயமாகவே மாறி விட்டது. இருசக்கர மோட்டார் வாகனங்களில் செல்வோர்ஹெல்மெட் அணியாவிட் டாலோ, கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டாலோ மட்டுமல்ல, சைக்கிள் ஓட்டுபவர்கள் துவங்கி, பேருந்து ஓட்டுநர்களிடமும் ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கும் கொடுமை மோடி ஆட்சியில் அரங்கேறி வருகிறது. லாரிஒட்டுநர்கள், லுங்கி அணிந்ததற்குக் கூட ரூ. 2 ஆயிரம் அபராதம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்களின் முதலுதவிப் பெட்டியில், ஆணுறை வைத்திருக்கவில்லை என்றாலும் அபராதம் விதிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, தில்லி போன்ற நகரங்களில், ஓலா மற்றும் உபேர் வாடகை கார் ஓட்டுநர்களிடம், இவ்வாறு அபராதம் வசூலிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆணுறை இல்லை என்பதற்காக, அபராதம் விதிப்பதற்கு மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை என்றாலும், போக்குவரத்துக் காவலர்கள், சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். சாலை விபத்துகள் ஏற்படும் பொழுது கை, கால் களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது அடிபட்டஇடத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலோ அந்த இடத்தில்ஆணுறையைக் கொண்டு இறுக்கிக் கட்டினால் ரத்தம் விரயம் ஆவதை தடுக்க முடியும் என்றும், இதற்காகவே அபராதம் வசூலிக்கப்படுகிறது என்றும் கதையொன்றுஅவிழ்த்து விடப்பட்டுள்ளது.

;