tamilnadu

சுகாதாரம் இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, ஜூலை 26- சுகாதாரம் இல்லாத கட்டி டங்களுக்கு அபராதம் விதிக்  கப்படும் என்று சென்னை  மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார். டெங்கு தடுப்பு பணிகள்  தொடர்பாக அலுவலர்கள்,  பூச்சி இயல் வல்லுனர்களு டன் ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய  ஆணையர், ஐ.டி., நிறுவ னங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்க ளில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு அவர்களது செலவிலேயே ஆண்டிபாடி பரிசோதனை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவ னங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். டெங்கு தடுப்பு தொடர்  பாக பல வழிகாட்டு உத்தர வுகள் பிறப்பிக்கப்பட்டன. களப்பணியாளர்கள் வீடு  வீடாக சென்று தொற்று பரி சோதனை மேற்கொள்ளும் போது வீடுகளில் இருக்கும்  பொதுமக்களிடம் வீட்டை  சுத்தமாகவும், சுகாதாரமாக வும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். சுகாதாரம் இல்லாத  கட்டிடங்கள், காலி இடங்க ளின் உரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். மீறினால் அபராதம் விதித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்,  சுகாதாரம் இல்லாத காலி  இடங்கள் சென்னை மாநக ராட்சிக்கு சொந்தமானது என்று பலகை வைக்க வேண்டும். அரசு மருத்துவமனை கள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை, குடிசை பகுதிகளை கண்ட றிந்து கொசு உற்பத்தியை தடுக்க, கிருமி நாசினி, கொசு  மருந்து அடுத்து முன்னெச் சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.