tamilnadu

img

10-இல் 9 பேருக்கு நிரந்தர ஊதியம் இல்லை

புதுதில்லி:
இந்தியாவில் பத்து பேர்களில் ஒருவர் மட்டுமே நிரந்தர ஊதியம் பெறும் வேலையில் இருப்பதாக ‘மிண்ட்’ ஊடகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய மோடி அரசின் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மோடி அரசு, இரண்டாவதுமுறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இப்போதாவது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமா? என்பதை பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.இதனிடையே, இந்தியாவில் நிலவும் வேலையின்மையின் தீவிரம் குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.அந்த வகையில், ‘மிண்ட்’ ஊடகம் 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தனது இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், “வாக்களிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் வேலையின்மை குறித்துத் தாங்கள் மிகுந்த அச்சம் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக, கால அளவிலான தொழிலாளர் படை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அப்போது நிரந்தர ஊதியம் பெறும் வேலையாட்களின் பங்கு 23 சதவிகிதமாக இருப்பதாக ஆய்வு கூறியது. ஆனால், 2004-08 காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்தவேலை உருவாக்கத்தின் வேகம், மோடி ஆட்சியில் இல்லை என்று ‘மிண்ட்’ தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.தொழில் நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வறிக்கையிலும் வேலை உருவாக்கம் மிக மந்தமாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

;