உடுமலை, ஜூலை 14- உடுமலை ஜெயின் இரிகேசன் நிறுவன ஊழியர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் எதிரொலியாக, வேலை யிழப்பு காலத்திற்கு ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். உடுமலை வட்டம், எலையமுத்தூர் ஜெயின் இரிகேசன் நிறுவனம் தொழி லாளர்களுக்குக் கடந்த நான்கு மாத கால மாக கொரோனாவை காரணம் காட்டி வேலையும், ஊதியமும் மறுத்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியில் சிக்கித் தவித்து வரும் நிலை யில் வெள்ளியன்று சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்நிறுவனத்தின் அதி காரிகளிடம், உடுமலை கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.
இந்நிலையில், உடுமலைப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று கோட்டாட்சியர் ரவிக்குமார் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைத்து தொழிலாளரகளுக்கு வேலை வழங்கவும், கொரோனா காலத்தில் வேலை வழங்காத நாட்களுக்கு ஊதியம் வழங்கவும், தலைமை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகை யும் இம்மாத இறுதியில் வழங்கப்படும் என அந்நிறுவனத்தினர் உறுதியளித்தனர். முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் உடுமலைப்பேட்டை காவல்துணைக் கண் காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஜெயின் இரி கேசன் நிறுவனத்தின் செழியன், சிஐடியு மாநில துணைச் செயலாளர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாநி லக்குழு உறுப்பினர் குமார், உடுமலை தாலுகா செயலாளர் எஸ்.ஜெகதீசன், கட் டிட கட்டுமான சங்கத்தின் தலைவர் கி.கன கராஜ், ஜெயின் இரிகேசன் சிஐடியு நிர்வாகி கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் பங் கேற்றனர்.