tamilnadu

img

நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ உரையை யூடியூபில் டிஸ்லைக் செய்யும் நெட்டிசன்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் உரையை  யூடியூபில் ஏராளமான பயனர்கள் டிஸ்லைக் செய்து வருகின்றனர்.பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று  மன் கி பாத் நிகழ்ச்சியின் 68வது நிகழ்வு ஞாயிறன்று நடந்தது.தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி  தனது  உரையில் குறிப்பிட்டார். அதுபோல் ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் கூறினார்.

“நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்,” என்று தனது உரையில் குறிப்பிட்டார்நரேந்திர மோடியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது.அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.ஏறத்தாழ 18 லட்சம் பேரால் அந்த காணொளி பார்க்கப்பட்டிருக்கிறது.31 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியை திங்கள்கிழமை மாலை வரை 74,000 பேர் லைக் செய்துள்ளனர். ஆனால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்லைக் செய்துள்ள னர். ஏறத்தாழ 88 ஆயிரம் கமெண்டுகள் பதிவாகி உள்ளன.

நீட், ஜேஇஇ தேர்வு எதிர்ப்பு மனநிலை
இந்த நிலையில் டுவிட்டரிலும் மோடிக்கு எதிரான ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.கமெண்டுகளை பார்க்கும் போது பலர் நீட், ஜே.இ.இ.  தேர்வுகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிகிறது.கொரோனா சமயத்தில் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்பது  பரவலான கோரிக்கையாக இருந்தது.கடந்த வெள்ளிக்கிழமை நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்களின் அமைச்சர்கள் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்களும் மோடியின் உரையை நெட்டிசன்கள் டிஸ்லைக் செய்வதற்கு காரணமாக இருப்பது கமெண்டுகளை பார்க்கும் போது தெரிகிறது.

;