தென்கொரியாவில் யுடியூப் சேனல் மூலம் 6 வயது குழந்தை மாதம் சுமார் 21 கோடி வருவாய் ஈட்டுகிறது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இந்த குழந்தை 2 யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். அந்த சேனலில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. கொஞ்சும் மழலை மாறாத இவரின் ரிவ்யூவை உலகம் முழுவதும் சுமார் 31 மில்லியனுக்கும் அதிகமானோர் கேட்டு ரசித்துவருகின்றனர்.
இந்நிலையில் போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், போரமின் சேனலை 31 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவரது சேனலின் பார்வையாளர்களும் ஆக்டிவில் உள்ளனர். இதனால் போரமின் மாத வருமானம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி (3.1 மில்லியன்) என குறிப்பிட்டுள்ளனர்.