tamilnadu

img

பெண்களை நிர்வாணமாக்கி கட்டாய மருத்துவ சோதனை.... குஜராத்தில் அரங்கேறிய மற்றுமொரு அராஜகம்

சூரத்:
குஜராத் மாநிலம் ‘பூஜ்’ பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசகஜ்ஜானந்தா மகளிர் கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவியர் 68 பேரின் ஆடைகளைக் களைந்து, கட்டாய மாதவிடாய் சோதனை நடத்தியது.

இது அண்மையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் ரணிங்கா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில்தான் சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக பணியாற்றும் 100 பெண் ஊழியர்களை, அரசு நடத்தும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று, கட்டாய மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதற்காக பெண் ஊழியர்களை அங்குள்ள - கதவு சரியாக மூடப்படாத ஒரு அறையில் வரிசையாக நிர்வாணமாக வெகு நேரம் நிற்க வைத்துள்ளனர். திருமணமாகாத பெண் ஊழியர்களிடம், நீங்கள் எப்போதாவது கர்ப்பமாக இருந்தீர்களா? என்றெல்லாம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “தங்களுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனை அவமானமாக இருப்பதாகவும், மனித உரிமைகளை மீறும் வகை யில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள், மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

;