tamilnadu

img

அயோத்தியில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரக்கூடாது... விஎச்பி திடீர் எதிர்ப்பு

புதுதில்லி:
அயோத்தியில் பாபர் மசூதி இருந்தஇடம் யாருக்குச் சொந்தமானது என்றவழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.அப்போது, மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கு சொந்தமானது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் வேறு இடத்தில்முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்வதற்கு, மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இதற்குத்தான் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.“சர்ச்சைக்குரிய நிலத்தின் உள்பகுதியும் வெளிப்பகுதியும் இந்துக் களுக்கே சொந்தமானது. எனவே முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவேண்டியதற்கான காரணம் ஏதும்இல்லை” என விஎச்பி கூறியுள்ளது.

மேலும், “நிலம் வழங்குவதாக இருந் தால், அதனை பழைய அயோத்தி நகராட்சிக்கு வெளியேதான் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ள விஎச்பி,உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளது.விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்துணைத் தலைவர் சம்பத்ராய் இத்தகவலை தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான குழுவுக்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் தலைமை ஏற்கக் கூடாது என்றகருத்தையும் சம்பத் ராய் வெளியிட்டுள்ளார்.அயோத்தி தீர்ப்பை எதிர்த்து, ஏற்கெனவே, இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் மவுலானா முப்தி ஹல்புல்லா, மவுலானா மஹ்பூசூர் ரஹ்மான், மிஸ்பாஹூதீன், முகமது உமர், ஹாஜி நஹ்பூப், முகமது ஆயூப்தாக்கல் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், 5 ஏக்கர் நிலஒதுக்கீட்டிற்கு எதிராக விஎச்பியும் சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளது.

;