tamilnadu

img

முஸ்லிம்கள் வேறு நாட்டைத் தேடிக் கொள்ளவாம்...

குஜராத் முதல்வர் ‘திமிர்’ப் பேச்சு

அகமதாபாத், டிச.25- நாடு முழுவதும் குடியுரி மைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக் கும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மறுபுறத்தில், பாஜக வினர் நாடு முழுவதிலும் குடி யுரிமைச் சட்டத்திற்கு ஆத ரவாகக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு கூட்டம், குஜ ராத்தில் சபர்மதி ஆசிரமம் அருகில் செவ்வாயன்று நடை பெற்றது. அப்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, எதிர்க்கட்சிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரை யும் திமிரான முறையில் விமர்சித்துள்ளார். “பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறி யுள்ள இந்துக்களுக்கு ஆத ரவாகச் செயல்படாத காங்கி ரசார், இஸ்லாமியர்களுக் காக மட்டும் போராட்டம் நடத்துவது எதற்காக?” என்று கேள்வி எழுப்பியுள்ள ரூபானி, “இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரே ஒரு நாடு, அதாவது இந்தியா மட்டுமே உள்ளதாகவும் இஸ்லாமியச் சமூகத்தினர் அவர்களுக்கென உலகி லுள்ள 150 நாடுகளுக்குச் சென்று குடியேற வேண் டும்” என்றும் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்கு உள் ளாகியிருக்கிறது.

;