tamilnadu

img

மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு நிலம் தானம்... சீக்கியருக்குக் குவியும் பாராட்டு

முசாபர் நகர் 
சீக்கியர்களின் குருவான குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். சீக்கியர்களின் முக்கிய விழாவாக இந்த நிகழ்வு இருப்பதால் நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என வட பகுதி மாநிலங்கள் விழாக்கோலம் போலக் காட்சியளிக்கும். இந்த திருவிழாவின் பொழுது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தின் புர்காசி என்ற நகரில் வசித்து வரும் சுக்பால் சிங் பேடி (70) சீக்கியர் மசூதி கட்டுவதற்கு 900 சதுர அடி நிலத்தை முஸ்லிம்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். மேலும் நிலம் தொடர்பான ஆவணங்கள் நகர பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் ஒப்படைத்து,"மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி இந்த நல்ல காரியத்தைச் செய்வதாக" சீக்கியர் சுக்பால் சிங் கூறியுள்ளார். அவரது இந்த நடவடிக்கையைச் சீக்கிய மற்றும் முஸ்லிம் மதத்தவர்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.பாபர் மசூதி பிரச்சனையால் ஏமாற்றமடைந்துள்ள முஸ்லீம் மக்களுக்குச் சீக்கியர்களின் செயலால் ஆறுதல் கிடைத்துள்ளது. 

;