புதுதில்லி:
நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதார உள்கட்டமைப்பில் சிறந்துவிளங்குகிறது என்றும், கொரோனா 2-வது அலையில் இது பிரதிபலித்துள்ளது என்றும்உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாநில அரசு ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய காப்பீட்டுத்திட்டம் 2012மற்றும் 2014-ன் கீழ் வலைப்பின்னலுக்குள் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கான மருத்துவ சிகிச்சைசெலவை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், பின்னர் அந்த தொகையை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைஎதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு நடைபெற்றது.அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் வாதிடுகையில், வலையமைப்புக்குள் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கும் இந்த புதியகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதற்கான மருத்துவ செலவுத் தொகையை காப்பீட்டு நிறுவனம்வழங்க வேண்டும் என்றும், பிறகுஅந்த தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அவ்வாறு கொடுத்த தொகையை அரசிடமிருந்து திருப்பி வசூலிக்க முடியாது. மற்ற ஒப்பந்தம்போலவே காப்பீட்டு நிறுவன ஒப்பந்தமும் வணிகபரிவர்த்தனையுடன் தொடர்புடையது. வரையறுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான பணமில்லா திட்டத்தில் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இரு தரப்பும் கட்டுப்பட வேண்டும்என்பதால் தனி நீதிபதியின் தீர்ப்புஏற்புடையதல்ல என்று தெரிவிக் கப்பட்டது.அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ் டாட்டில் , காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் உரிமை கோருபவர்கள் தமிழ்நாடு மருத்துவ வருகை விதிகளின்படியும் செலவழித்த தொகையை திருப்பிக்கோர முடியும் என்று கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதார உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்றும், கொரோனா இரண்டாவது அலையில் பிரதிபலித்துள் ளது என்றும் பாராட்டு தெரிவித்தார். பின்னர் இந்த வழக்குவிசாரணை ஒத்திவைக்கப்பட் டது.