tamilnadu

img

4 வாரத்தில் ரூ. 67,000 கோடி அள்ளினார் முகேஷ் அம்பானி!

புதுதில்லி:
கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இந்தியமக்களும் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், இந்தியாவின் முதற் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கஜானாவுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை. அம்பானிக்குச் சொந்தமான “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” பங்குகளில், உலகின்முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு முதலீடு செய்து வருகின்றன.

ஏப்ரல் 22 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ‘ஜியோ’ நிறுவனத்தில் 9.99 சதவிகித பங்குகளை, ரூ. 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக்நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து மே 3 அன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15 சதவிகித பங்குகளை ரூ.5 ஆயிரத்து 656 கோடிக்கு வாங்கியது. கடைசியாக மே 8 அன்று ‘விஸ்டா’ நிறுவனம் 2.32 சதவிகித ஜியோ பங்குகளை ரூ. 11 ஆயிரத்து 367 கோடிக்கு  வாங்கியது.இந்நிலையில், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், தற்போது 1.34 சதவிகித ஜியோ பங்குகளை ரூ. 6 ஆயிரத்து 598 கோடியே 38 லட்சம் ரூபாய்க்குவாங்கியுள்ளது. இவற்றின் காரணமாக, கொரோனா நெருக்கடிக்கு இடையிலும் கடந்த நான்கு வாரத்தில் சர்வதேச பெருநிறுவனங்களிடமிருந்து ரூ. 67 ஆயிரத்து 194 கோடியே 75 லட்சம் அளவிலான முதலீட்டை முகேஷ் அம்பானி அள்ளிக் குவித்துள்ளார். இதன்மூலம், தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அம் பானி குறிப்பிட்டுள்ளார்.

;