tamilnadu

img

800 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி நாடாளுமன்றத்திற்கு 80 நாட்கள் கூட வரவில்லை!

புதுதில்லி, ஏப்.10-பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக இருந்த 5 ஆண்டுகளில் சுமார் 800 நாட்கள் அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்துள்ளதாகவும், ஆனால், நாடாளுமன்ற விவாதங்களுக்கு 80 நாட்கள் கூட வரவில்லை என்றும்அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, “நாங்கள் நாடாளுமன்றம் எனும் மக்களாட்சி கோயிலில்இருக்கிறோம்; நாங்கள் தூய்மையாக பணியாற்றுவோம்; ஆட்சியின் முடிவில்2019-ல் எங்களின் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு அனைவரும் சான்று அளிப் பார்கள்” என்றெல்லாம் பேசினார்.ஆனால், நாடாளுமன்றத்தில் முக்கியமான பல மசோதாக்களை விவாதத்திற்கே விடாமல், தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து,மோடி நிறைவேற்றினார்; விவாதங்கள் நடத்தவே மோடி அனுமதிக்கவில்லை என்று அரசியல் ஆர்வலர்கள்தெரிவித்துள்ளனர்.மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டிய பல மசோதாக்களை அங்கு தாக்கல் செய்யவில்லை; எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை; 10 சதவிகித இடஒதுக்கீட்டுமசோதா, திட்டமிட்டே கூட்டத்தொடரின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலைஅறிக்கை மீதும் விவாதம் நடக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

;