tamilnadu

img

நாட்டைத் துண்டாக்கும் துரியோதனன், துச்சாதனன்.. மோடி, அமித்ஷாவை சாடிய யஷ்வந்த் சின்ஹா

புதுதில்லி:
மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு (சிஏஏ)எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம், அசாம் கணபரிஷத் உள்ளிட்ட கட்சிகளும், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக அமைச்சர்கள் பலரும், போராட்டம் நடத்தும் பொதுமக்களையும், எதிர்க்கட்சிகளையும், ‘நாட்டைத் துண்டாட சதி செய்கிறார்கள்’ என குற்றம்சாட்டி வரு கின்றனர். “முகலாயர்களும், ஆங்கிலேயர் களும் நாட்டை துண்டாக்க நினைத்தும் அது முடியாத நிலையில், ராகுல் காந்தி,காங்கிரஸ், அசாதுதீன் ஒவைசி ஆகி யோர் முயல்கின்றனர்; அவர்கள் உள் நாட்டுப் போரை உருவாக்கவும் நினைக்கின்றனர்” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.

இவ்வாறு நாட்டைத் துண்டாட நினைப்பவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாய்ந்திருந்தார்.இந்நிலையில்தான், “நாட்டைத் துண்டாக்க நினைப்பவர்கள் பாஜக-வில்தான் இருக்கிறார்கள்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்ச ருமான யஷ்வந்த் சின்கா சாடியுள்ளார்.“நாட்டைத் துண்டாக்கும் பயங்கரக் கும்பலில் துரியோதனன் மற்றும் துச்சாதனன் என இருவர் உள்ளனர்; அவர்கள் இருவரும் பாஜக-வில் உள்ளனர்; அவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹா பதிவிட்டுள்ளார்.“நாட்டைத் துண்டாடுபவர்கள் மத்திய ஆட்சியாளர்களாக தில்லியில் உள்ளனர்” என்று வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவும் அண்மை யில் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

;