tamilnadu

img

இந்தியா-பாக்.கிற்கு  மெஹ்பூபா முப்தி வேண்டுகோள்....

புதுதில்லி:
அரசியல் நிர்ப்பந்தங்களை தாண்டிஇந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று மக்கள்ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மெஹ்பூபா முப்தி தனது டிவிட்டர்  பக்கத்தில், இரு நாட்டு எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளிலும் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது.வாஜ்பாயும், முஷாரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, பேச்சுவார்த்தைக்கு நல்ல துவக்கமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.