tamilnadu

img

மொழியாக்கம் கொண்டாடுவோம் - - மயிலைபாலு

பைபிள் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம் உலகம் முழுவதும் உள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இன்ட்டர்பிரட்டர்க ளுக்கும் எப்போதும் புரவலராகக் கருதப்படு கிறார். எனவே  நீண்டகாலமாக செப்டம்பர் 30 மற்றும் அதையொட்டிய நாட்கள், வாரங்கள் (சிலநேரங்களில் மாதங்கள் கூட) மொழி பெயர்ப்பாளர்களாலும் இன்ட்டர்பிரட்டர்களாலும் (அவர்களின் சங்கங்களாலும் )  கொண்டாடப்படு கிறது. 1953- ல் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டமைப்பு ( ஃபிட் ) உருவாக்கப்பட்டதிலிருந்து புனித ஜெரோம் தினக் கொண்டாட்டங்களை ஃபிட் குழுமம் மற்றும் நிர்வாகக்குழு தற்காலிக முறையில் ஊக்கப்படுத்தியது; பரவலாக்கியது. ஃபிட் அமைப்பின் மக்கள் தொடர்புக்குழு 1991-ல் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்ற யோசனையை முன்வைக்கும் வரை அப்படி யெதுவும் நடக்கவில்லை.  இந்த தினத்தைக் கொண்டாட இளம் மொழி பெயர்ப்பாளர்களுக்கு பட்டயம் வழங்குதல், பணிசார்ந்த சங்கங்களில் புதிய மொழி பெயர்ப்பாளர்களைச் சேர்த்தல், விருதுகள் வழங்குதல், அடுத்த ஆண்டுக்கான செயல்பாடு களை அறிவித்தல் போன்ற பல யோசனைகளைத் தெரிவித்துப் பத்திரிகைச் செய்தி வெளியிட்டு  ஃபிட் உறுப்பு சங்கங்களுக்கு விநியோகிக்கப் பட்டன. பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாத பணிகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு  அதிகரிக்கும் என்பதால் சர்வதேச மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டங்களில் ஊடகங்களை ஈடுபடுத்துமாறும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. 

1991- லிருந்து சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை உறுப்பு சங்கங்கள் கொண்டாடிய, விதவிதமான வழிமுறைகள் பற்றிய விவரங்களை ஃபிட் செயலகம் திரட்டியது.  1991-ல் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்திற்கு அதிகாரப்பூர்வமான மையப்பொருள் அறிவிக்கப்படவில்லை. 1992 ல்  பிரைட்டன் ஃபிட் காங்கிரஸ் “மொழிபெயர்ப்பு - முக்கியமான தொடர்பு” என்பதைக் கொண்டாட்டங்களுக்கான மையப்பொருளாகத் தெரிவு செய்தது.

993-ன் மையப்பொருள் “மொழிபெயர்ப்பு, ஒரு பரவலான இருப்பு” என்பதாக இருந்தது. இதற்கான நிகழ்வின்போது ஃபிட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சில சுவாரசியமான புள்ளிவிவரத் தகவல்கள் தரப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு ஒரு சில:  பைபிள் முழுமையாக 310 மொழிகளிலும் பைபிளின்சில பக்கங்கள் 1597மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் 93மொழி களில்மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் லெனின் படைப்புகள் 321 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.  பிரஞ்ச் நாவலாசிரியர் ,கவிஞர் , நாடக எழுத்தாளர். அறிவியல் புதினங்களின்தந்தை என்று அழைக்கப்பட்ட ஜூல்ஸ் கேப்ரியல்  வார்னே (8-2-1828 - 24-3-1905 ) யின்படைப்புகள் 238 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

காரல் மார்க்சின் படைப்புகள் 103 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.  இதன்மூலம் குறைந்தபட்சம் 1993 வரையிலான தகவலாவது நமக்குக் கிடைக்கின்றன .   1994-ன் சர்வதேச மொழிபெயர்ப்பு தின மையப்பொருள் “மொழிபெயர்ப்பின் பன்முகங்கள்”. மொழிபெயர்ப்பாளர்கள் செயல்படும் பன்முகத்துறைகள் பற்றி ஃபிட் அமைப்பின் தலைவர் ஜீன் எஃப் ஜோலி இப்படிக் குறிப்பிட்டார் :  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மொழி பெயர்ப்பாளர்கள்,   

ஊடகங்களின் மொழிபெயர்ப்பாளர்கள், அகராதிச்சொல்  மொழிபெயர்ப்பாளர்கள் , மாநாடுகள், நாடாளுமன்றம் , நீதிமன்றம் போன்றவற்றில் மொழிபெயர்ப்போர்,  செவித்திறன் குறைபாடு உடையோருக்குத் தகவல்களை சைகை மொழியால் மாற்றுவோர் என்று அவர் வகைப்பாடு செய்கிறார் .  1995ன் மையப்பொருள் “வளர்ச்சிக்கு முக்கியம் மொழிபெயர்ப்பு” என்பதாகவும் 1996ன் மையப்பொருள் “மொழிபெயர்ப்பாளர்களும் காப்புரிமையும்” என்பதாகவும் இருந்தன. 1996ல் சர்வதேசக் காப்புரிமை தினம் என்ற யோச னையை யுனெஸ்கோ நிறுவனம் முன்வைத்தது. இந்நிலையில் மொழிபெயர்ப்பாளர்கள் ( குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்ப்போரும் ஊடகங்களின் மொழிபெயர்ப்பாளர்களும் ) தங்களின் காப்புரிமை களில் போதிய கவனம் செலுத்துவதில்லை. மேலும் இன்ஃபர்மேஷன் ஹைவே உருவாக்கியுள்ள புதிய காப்புரிமை விஷயங்களிலும் மொழி பெயர்ப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். 

ஊடகங்களின் மொழிபெயர்ப்பாளர்கள், அகராதிச்சொல்  மொழிபெயர்ப்பாளர்கள் , மாநாடுகள், நாடாளுமன்றம் , நீதிமன்றம் போன்றவற்றில் மொழிபெயர்ப்போர்,  செவித்திறன் குறைபாடு உடையோருக்குத் தகவல்களை சைகை மொழியால் மாற்றுவோர் என்று அவர் வகைப்பாடு செய்கிறார் .  1995ன் மையப்பொருள் “வளர்ச்சிக்கு முக்கியம் மொழிபெயர்ப்பு” என்பதாகவும் 1996ன் மையப்பொருள் “மொழிபெயர்ப்பாளர்களும் காப்புரிமையும்” என்பதாகவும் இருந்தன. 1996ல் சர்வதேசக் காப்புரிமை தினம் என்ற யோச னையை யுனெஸ்கோ நிறுவனம் முன்வைத்தது. இந்நிலையில் மொழிபெயர்ப்பாளர்கள் ( குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்ப்போரும் ஊடகங்களின் மொழிபெயர்ப்பாளர்களும் ) தங்களின் காப்புரிமை களில் போதிய கவனம் செலுத்துவதில்லை. மேலும் இன்ஃபர்மேஷன் ஹைவே உருவாக்கியுள்ள புதிய காப்புரிமை விஷயங்களிலும் மொழி பெயர்ப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்

1997ன் மையப்பொருள் “சரியான திசையில் மொழிபெயர்ப்பு”. ஃபிட் அமைப்பின் பின்லாந்து உறுப்பு சங்கத்திடமிருந்து இந்த ஆலோசனை வரப்பெற்றது . பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால்  ஃபன்னிஷ் மொழியைத் தவிர பிறமொழிப் பணி களில் ஈடுபடவேண்டும் என்று நினைத்து க்கொண்டு இருக்கிறார்கள். ஒருவரின் தாய்மொழியில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு / இன்டர்பிரடேஷன்தான் சிறந்தது என்ற பார்வையை நமது சகாக்கள் இழந்துவருகிறார்கள். இதுவே மிகப்பெரிய விவாதத்திற்குரியது என்று நாங்கள் நம்புகிறோம் என்று இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இவ்வாறு சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “உள்நாட்டு மொழிகள்”  என்பதாகும். மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவர் . ஆனால் உள்நாட்டில் அவர்களுக்கான மதிப்பு கிடைப்பதில்லை.  படைப்பாளர்கள் பெரும்பாலும் மொழியாக்க நூல்கள் வழியாகவே ஊக்கம் பெறுகிறார்கள். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் போன்று கருத்து வெளிப்பாட்டுக்குப் பல்வேறு வடிவக்குழந்தைகளை ஈன்று புறந்தந்தது மொழியாக்க முயற்சிதான் என்பது வரலாறு.  புதுமைப்பித்தன் மிகச் சிறந்த படைப்பாளியாக விளங்கியவர்.  சிறுகதை இலக்கியங்களின் முன்னோடி. அவர் பல சிறுகதைகளை மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார் என்பது பற்றி எவ்வளவுபேர் பேசுகிறார்கள்? 

 பலரும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதால் நமக்குப் பல இலக்கியங்கள் கிடைத்தன. மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பாளர். வந்தேமாதரம் என்ற வங்கமொழித் தொடரை மாநிலத்தாயை வணங்குதும் என மொழியாக்கித் தந்தவர்.  சுந்தரம் பிள்ளையவர்களின் மனோன்மணியம் காவியம் கிடைத்ததே மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் . பாரதிதாசன்  நேரடியாக மொழி பெயர்ப்பு செய்யாவிட்டாலும் தழுவல் இலக்கியம் தந்திருக்கிறார்.  தமிழகத்துப் படைப்பாளிகளிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தைத் தாய் நாவலும் சோவியத் படைப்புகள் பலவும் ஏற்படுத்தின  என்பதை  அனைவரும் அறிவர். 

மொழிபெயர்ப்புக்கு இவ்வளவு ஆற்றல் இருந்தாலும் நேரடியாகப் படைப்பிலக்கியம் செய்வோருக்குக் கிடைக்கின்ற வெளிச்சம் மொழி பெயர்ப்பு செய்வோருக்குக் கிடைப்பதில்லை. சிறந்த நூலுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும்போது பலராலும் படைப்பாளிகள் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்குப் பரிசு பெற்ற படைப்பாளிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை; அல்லது அரிதாகவே பாராட்டு கிடைக்கிறது.  ஏன் இந்தப் பாகுபாடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.  மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடுவோரைப் பாராட்டுவது அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மிகவும் முக்கியம்.  இதுவரை செய்யத் தவறியிருந்தாலும் இனி அதைச் செய்ய வேண்டும். அதற்கு ஒரு முதன் முயற்சியாக உலகப்புத்தக தினம் கொண்டாடப்படுவது போல்,  காதலர் தினம் கொண்டாடப்படுவது போல் , உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது போல் மொழி பெயர்ப்பாளர்கள் தினமும் கொண்டாடப்படலாம்.   அதற்காக  சிறப்புப் புத்தகக் கண்காட்சி  நடத்தலாம். மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.  நல்லி திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டு இதழ் ஆண்டுதோறும் நடத்துவது போல் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கலாம்.  பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மொழியாக்கப் போட்டிகள் நடத்தலாம். இவையெல்லாம் நடைபெறும்போது ‘ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘  என்ற பாரதியின் கனவு நனவாகும்.  தமிழை, தமிழர்களை,  தமிழகத்தின் சிந்தனை வளத்தை, அறிவியல் திறத்தை,  தத்துவத்தை இது வலுவாக்கும்;  விரிவாக்கும்.