tamilnadu

img

கேரளத்தின் வருவாய் இழப்பு ரூ .79,300 கோடி

திருவனந்தபுரம்:
கேரளத்தின் வருவாய் இழப்பு குறைந்தது ரூ .79,300 கோடியாக இருக்கும் என்று நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்த குலாத்தி  நிறுவனத்தின் வரிவிதிப்பு ஆய்வுகளில் (ஜிஃப்டி) இது தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மூன்று அனுமானங்களாக மாநில வருவாய் குறைவு மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 47 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் நிலைமை இயல்புக்கு திரும்பினால் வருவாய் இழப்பு ரூ .79,300 கோடியாக இருக்கும்.  இயல்பு நிலையை எட்ட 3 மாதங்கள் ஆனால் ரூ .1,35,523 கோடியாகவும்,  ஆறுமாதங்கள் ஆனால் இழப்பு 1,65,254 கோடியாகவும் இருக்கும். மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவுக்கான சாத்தியப்பாடுகளையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஐந்து சதவிகிதம் விலை உயர்வு ஏற்பட்டால் பொருளாதார வீழ்ச்சி கடுமையாகிவிடும்.  இயல்பு நிலைக்கு திரும்பினால் 47 நாட்களைக் கருத்தில் கொண்டால், வளர்ச்சி -2.94 சதவிகிதமாகவும், மூன்று மாதங்கள் ஆனால் வீழ்ச்சி 10.13சதவிகிதமாகவும், ஆறு மாதங்கள் நீடித்தால் வீழ்ச்சி -13.56 சதவிகிதமாகவும் இருக்கும். அந்த நிலையில், பட்ஜெட் பற்றாக்குறை ரூ .33,455 கோடியாக இருக்கும் எனவும் கூறினார்.  

ஜிஎஸ்டி ரூ.19, 816 கோடி, கலால் வரி ரூ.330 கோடி, மது வரி ரூ.1657 கோடி, பெட்ரோல் வரி ரூ.1517 கோடி, முத்திரை வரி ரூ.1291 கோடி, மோட்டார் வாகன வரி ரூ.740 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.651 கோடி, மத்திய பங்கு விகிதம் ரூ.7451 கோடி என வருவாய் இழப்பு ஏற்படும். நிதி ஆணையத்தின் தீர்ப்பு அடிப்படையிலான வருவாய் மானியம் ரூ .15,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டால், வருவாய் இழப்பு ரூ.66,180 கோடியாக இருக்கும்.  2 சதவிகிதம் அதிகமாக கடன் வாங்க மத்திய அரசு அனுமதித்தாலும், கடன் ஐந்து சதவீதமாக மட்டுப்படுத்தப்படும். அரசு செலவுகளைக் வெட்டிக் குறைத்தாக வேண்டும். மத்திய அரசின் நிலைப்பாட்டைக்கருத்தில் கொண்ட பின்னரே இறுதி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேரள  நிதியமைச்சர் கூறினார்.

;