tamilnadu

img

கேரள முதல்வர் அலுவலகம் விவாதமாகவில்லை... மனோரமா செய்தி பச்சைப்பொய்....

புதுதில்லி:
“முதல்வர் அலுவலகத்தின் கவனக்குறைவு: சிபிஎம்”என்கிற தலைப்பில் மலையாள மனோரமா செவ்வாயன்று வெளியிட்ட செய்தி பச்சைப் பொய். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட விவாதங்களில் முதல்வரின் அலுவலகத்தின் கவனக்குறைவு தெளிவாகி உள்ளது என அரசியல் தலைமைக்குழு மதிப்பீடு செய்துள்ளது என்பது மனோரமா செய்தி.அத்தகைய ஒரு விவாதமோ, மதிப்பீடோ அரசியல் தலைமைக்குழுவிலோ மத்தியக் குழுவிலோ நடக்கவில்லை என்று சிபிஎம் அரசியல் தலை
மைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.

“ஒரு அதிகாரியின் தவறுதான் நடந்துள்ளது என பினராயி விஜயன் கூறியதாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள் ளது” என்பதும் செய்தி. பினராயி விஜயன் இவை எதையும் கூட்டத்தில்விளக்கவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை என எஸ்ஆர்பி தெரிவித்துள்ளார். மேலும், கட்சிவட்டாரங்கள் அவ்வாறு அந்த நாளிதழிடம் கூறவில்லை எனவும் கூறியுள்ளார். ‘விசாரணைக்கு பிறகு கட்சி, விரிவாக பரிசீலனை செய்யும்’என்கிற வார்த்தை பயன் பாடே முரண்பாடானது எனவும் எஸ்ஆர்பி சுட்டிக்காட்டி
னார். பொய் எழுதும் போதுதான் இத்தகைய அபத்தம்நிகழ்கிறது. பொருத்தப் படாத வார்த்தைகளின் வெளிப்பாடு அடிப்படை இல்லாதவற்றை பிரச்சாரம் செய்வதாகும் எனவும் எஸ்ஆர்பி கூறினார். முதல்வருக்கு கட்சி நற் சான்று அளிக்கிறதா என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுந்த போது,கட்சி அல்ல, என்ஐஏ தான் நடத்துகிறது என்பதே கட்சிபொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில். தங்கம் கள்ளக்கடத்தல் மாநில அரசின் வரம்புக்குள் வருவதல்லஎன மத்தியக்குழு தனது அறிக்கையில் (கன்யூனிக்கை) விளக்கியுள்ளதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.

;