tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் கைதுக்கு ஜேஎன்யு மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் கண்டனம்

 

ஜேஎன்யு மாணவர்கள் நடாஷா, தேவன்கானா மற்றும் பிஞ்ச்ரா டோட் கைது செய்யப்பட்டிருப்பதற்கு ஜேஎன்யு மாணவர் சங்கமும், ஜேஎன்யு ஆசிரியர் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“தில்லி போலீசார் கோவிட்-19 தொற்று பரவாதிருப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட சமூக முடக்கத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஆட்சிக்கு எதிராகக் கருத்துவேறுபாடு கூறுகிறவர்களைக் கைது செய்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது,” என்று ஜேஎன்யு மாணவர் சங்கம் கூறியுள்ளது. பிஞ்ச்ரா டோட் மாணவர்கள் தங்கள் போராட்டங்களில் விழிப்புடனும், வலுவாகவும் இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “தில்லிப் போலீசார் கைது செய்திருக்கும் முறைக்கம், பல உண்மை அறியும் குழுக்கள் பதிவுசெய்துள்ள வன்முறைகளுக்கும் இடையே முற்றிலும் பொருந்தாத்தன்மை இருப்பதாக,” ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கூறியிருக்கிறது.