tamilnadu

img

பொறியியல் கல்லூரிகளில் படித்தால் “மவுசு” உள்ளதா? மூன்று சதவீதம் பேருக்கே கிடைக்கிறது நல்ல சம்பளம்...

புதுதில்லி:
இந்தியாவில் மூன்று சதவீத பொறியாளர்களுக்கு மட்டுமே தகுதியான வேலையும், நல்ல சம்பளமும் கிடைப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

தொழில்துறையினரின் மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும்இந்தியாவில் 15 லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெறுகின்றனர். அவர்களில் 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தொழில்நுட்பக் களத்தில் பொருத்தமான வேலைகளைச் செய்கிறார்கள். இவர்களில் 2.2 லட்சம் பேர்மென்பொருள் துறையில் பணியாற்றுகின்றனர். சுமார் 1.8 லட்சம் பேர் வருடத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையே சம்பாதிக்கின்றனர்.மூன்று சதவீத பொறியாளர்கள் (சுமார் 15 லட்சம் பேர்) மட்டுமே எட்டுலட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம்ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் முதல் தரபொறியியல் கல்லூரிகளிலிருந்து வருகிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் பொறியியல் கல்லூரிகளிலிருந்து வருபவர்களுக்கு பொருத்தமான நல்லவேளை கிடைப்பதில்லை. ஏற்றத் தாழ்வான வேலையே கிடைக்கிறது. இந்தஎண்ணிக்கை வருடத்திற்கு 12 லட்சமாக உள்ளது.பொறியியல் பட்டதாரிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு பொருத்தமான வேலை கிடைக்காததால் தொழில்நுட்பமற்ற தொழில் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். 

இது குறித்து இன்டர்வியூ பிட் & ஸ்கேலர் அகாதெமியின் இணை நிறுவனர் அபிமன்யு சக்சேனா கூறுகையில் “பொறியியல் பட்டதாரிகளிடையே உயர்தர வேலைகளுக்குத் தேவையான திறன்களில் பற்றாக்குறை உள்ளது. உயர்தர தொழில்நுட்ப வேலைகளுக்குத் தேவையான திறன்களுக்கும் பட்டதாரிகளின் வேலை-தயார்நிலைக்கும் இடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காகவும், பொறியியல் மாணவர்களின்வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் ‘ஸ்கேலர் எட்ஜ்’ என்ற கல்லூரிதுணைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  ஆன்லைனில் பெருகிவரும் திறன் படிப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய இந்த நிதியாண்டில் மேலும் 500 கற்பித்தல் உதவியாளர்களையும் வழிகாட்டிகளையும் பணியமர்த்த  திட்டமிட்டுள்ளது என்றார்.

அதிர்ச்சியளிக்கும்  தமிழக நிலவரம்

அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள பட்டியலில் (ஏப்ரல்-மே 2019 தேர்வு) பி.இ., பி.டெக்., முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் 101 கல்லூரிகள் 50 சதவீதம்முதல் 95.37 சதவீதம் வரை தேர்ச்சி விகிதம் காட்டியுள்ளன. 166 கல்லூரிகள் 30 சதவீதம் 50 சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளன. 267 கல்லூரிகள் இரண்டு சதவீதம் முதல் 29.95 சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளன. இரண்டு கல்லூரிகள் 1,83,1.55 தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளன. அரியலூரில் உள்ள கல்லூரிஒன்றில் தேர்வெழுதிய 237 பேரும்,காஞ்சிபுரத்தில் தேர்வெழுதிய 82 பேரும் தேர்ச்சி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர்-டிசம்பர் 2019-தேர்வுகளில் 56 கல்லூரிகளே 83.77 சதவீதத்திலிருந்து 50 சதவீத தேர்ச்சியை காட்டியுள்ளன. 10 சதவீதம் முதல் 20 சதவீததேர்ச்சியை 99 கல்லூரிகள் பெற்றுள்ளன. 0 சதவீதம் முதல் 9.99 சதவீததேர்ச்சியை 80 கல்லூரிகள் பெற்றுள்ளன என்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.

;