tamilnadu

img

இந்திய தொழிற்துறை கஷ்டகாலத்தில் உள்ளது!

புதுதில்லி:
இந்தியாவில் தொழில்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கஷ்டகாலத்தை எதிர்கொள்கின்றன என்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியே திருவாய் மலர்ந்து ஒப்புக் கொண்டுள்ளார்.
விதர்பா கைத்தொழில் சங்கத்தின் 65-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய கட்காரி, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அதில், “நாட்டின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது; பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ள கட்காரி, “வாகன உற்பத்தித் துறை ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வருவதாகவும், மந்தநிலை குறித்து, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தொழிற்துறையினர் மத்தியில், தான் பேசுகையில், “கபி குஷி ஹோதி ஹை கபி காம் ஹோட்டா ஹைன் (மகிழ்ச்சியான நேரங்களுக்குள்ளும் துக்க காலங்கள் உள்ளன) என்ற வார்த்தைகளைக் கூறி, ‘சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள், சில நேரங்களில் நீங்கள் தோல்வியடைகிறீர்கள்.. வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது. எனவே உங்கள் வாழ்க்கையிலும், உலக பொருளாதாரத்தின் காரணமாக, தேவை மற்றும் வழங்கல் காரணமாக, சிறிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது; மற்றபடி ஏமாற்றமடைய வேண்டாம், இந்த நேரம் விரைவில் கடந்துவிடும்” என்று ஆறுதல் தெரிவித்ததாகவும் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

;